ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
05:58

கும்மிடிப்பூண்டி--மாதர்பாக்கம் அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. அங்கு, 'எஸ்தல்' என்ற பெயரில், பழைய டயர்களில் இருந்து ரப்பரை தனியாக பிரித்து, துண்டுகளாக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.நேற்று அதிகாலை அந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. திறந்தவெளியில் குவிக்கப்பட்டிருந்த டயர்கள் தீ பிடித்து எரிந்தன. கட்டுக்கு அடங்காமல், 40 அடி உயரத்திற்கு, கொளுந்து விட்டு எரிந்தன.தேர்வாய் கண்டிகை சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வாகனங்கள், ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X