10 வயது சிறுமிக்கு குடல்வால் அறுவை சிகிச்சை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
06:06

திருவள்ளூர்-திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதல் முறையாக 10 வயது சிறுமிக்கு, குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பிரசவம், சிறிய அளவிலான நோய்களுக்கு மட்டும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.தற்போது, அரசு மருத்துவக்கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான வசதியும், சிறப்பு மருத்துவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அந்த வகையில், இம்மருத்துவமனையில் இதுவரை, பெரியவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்த குடல்வால் அறுவை சிகிச்சை, 10 வயது சிறுமிக்கு நேற்று நடந்தது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற சிறுமிக்கு, குடல்வால் நோய் பிரச்னையால், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நேற்று மருத்துவமனை முதல்வர் அரசி தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருண்பாபு, மயக்கவியல் நிபுணர் மருத்துவர் காந்திமதி உள்ளிட்ட குழுவினர், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களுக்கு பின், முதல் முறையாக சிறுமிக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X