368 அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
368 அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
06:10

சிவகங்கை : சிவகங்கையில் மாத சம்பளமின்றி கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 368 பேருக்கு உதவித்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.



தமிழக அரசு திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூஜாரிகள், இதரப்பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கஉத்தரவிட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பலஅடிகள் முன்னிலை வகித்தார். கோயில்களில் பணிபுரியும் 368 அர்ச்சகர்கள், இதரபணியாளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், 15 வகையான மளிகைப் பொருட்களைஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.



நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால்,காஞ்சிரங்கால் ஊராட்சித்தலைவர் மணிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள்பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X