மூன்று மாவட்டங்களில் 49 இன்ஸ்.,கள் இடமாற்றம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மூன்று மாவட்டங்களில் 49 இன்ஸ்.,கள் இடமாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
07:04

விழுப்புரம் : விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 49 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு கடலுார் மாவட்டம் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கும்; விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.



மேலும், கடலுார் முதுநகர் இன்ஸ்பெக்டர் ராஜா கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டைக்கும்; கடலுார், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவிற்கும்; கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் கடலுார் மாவட்டம் காடாம்புலியூருக்கும் என 49 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி., பாண்டியன் பிறப்பித்துள்ளார்.இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 67 போலீசாரை இடமாற்றம் செய்து, எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X