இரு இடங்களில் சிறுமிகள் கடத்தல்: போக்சோ சட்டத்தில் இருவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
07:05

பண்ருட்டி : பண்ருட்டி அருகே சிறுமியை ஏமாற்றி 2வது திருமணம் செய்தவரை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.



கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கோயம்புத்துார் நுால் மில்லில் பணி புரிந்தார்.பின், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமி வேலையை விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்நிலையில் மிஸ்டு கால் மூலம் வேன் டிரைவர் விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி வட்டம், மானந்தல் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ்,27; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.முத்துராஜ் , சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தார்.



கடந்த 10.12.2020 அன்று சிறுமியை மேல்மலையனுார் கோவிலுக்கு கடத்திச் சென்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் முத்துராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் பிரசன்னா என்ற குழந்தை இருப்பது தெரிந்தது. அதனை தட்டிக்கேட்ட சிறுமியை முத்துராஜ் மற்றும் அவரது உறவினர்கள் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.



இது குறித்து சிறுமியின் தாய் பண்ருட்டி மகளிர் போலீசில் கொடுத்தார். புகாரின் பேரில் முத்துராஜ்,29; அவரது தந்தை முனுசாமி, அமிர்தா, கவிதா, ஜெயமணி, லாவண்யா, முனிராஜ், தங்கவேல், பாக்கியராஜ், ஆகிய 9 பேர் மீது குழந்தை திருமணம் ,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முத்துராஜ் கைது செய்தனர். மற்ற 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



புதுச்சத்திரம்



புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுாரைச் சேர்ந்தவர் ராயர் மகன் சந்திரசேகர், 26; இவர், கடந்த 5ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த 17வயது பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்றதாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வந்தனர். குள்ளஞ்சாவடி அருகே உறவினர் வீட்டில் கடத்தி வரப்பட்ட பெண்ணுடன் பதுங்கியிருந்த சந்திரசேகரை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். இதில், பெண்ணை கடத்தி வந்தது தெரிந்தது. பின், 'போக்சோ' சட்டத்தில் சந்திரசேகரை கைது செய்தனர்.மீட்கப்பட்ட பெண்ணை கடலுாரில் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X