6 ஊராட்சி செயலர்கள் மாற்றம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
6 ஊராட்சி செயலர்கள் மாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
07:05

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்கள் ஆறு பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வொன்றியத்தில் மேலையூர், கல்லம்பட்டி, வகுத்தெழுவன்பட்டி, எம்.சூரக்குடி, எஸ்.மாத்தூர், சிவபுரிபட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களாக பணிபுரிந்தவர்கள் இந்த ஆறு ஊராட்சிகளுக்குள்ளேயே நேற்று பணியிடம் மாற்றப்பட்டனர். உள்ளூர் அரசியல் கட்சியினரின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே ஊராட்சி செயலர்களை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும், ஊராட்சியில் வளர்ச்சிப் பணி பாதிக்கப்படும் என சில ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் நிர்வாக நலன் கருதியே ஊராட்சி செயலர்கள் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X