வீட்டை விற்று முதியவரிடம் மோசடி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வீட்டை விற்று முதியவரிடம் மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
09:43

கோவை வெள்ளானப்பட்டியை சேர்ந்தவர் மசாக்கவுண்டர், 81. வெள்ளானப்பட்டியில் நான்கு சென்ட்டில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ. 50 லட்சம்.கண்ணம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கிய சார்லஸ், 44 என்பவர் மசாக்கவுண்டரை சந்தித்து, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் கடன் வாங்கினால், 2 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும் என, தெரிவித்தார். இதற்காக வீட்டை தனக்கு, அதிகார பத்திரம் எழுதித்தருமாறு அவர் தெரிவித்தார். இதை உண்மை என, நம்பிய மசாக்கவுண்டர் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.



இதையடுத்து ஆரோக்கிய சார்லஸ், வீட்டை கண்ணம்பாளையத்தை சேர்ந்த சுதா, 43 என்பவருக்கு விற்பனை செய்தார். ஆவணத்தில், 13 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மசாக்கவுண்டருக்கு வழங்கியதாக எழுதி வாங்கினார். தொடர்ந்து, சுதா வீட்டை அடகு வைத்து, வங்கியில் கடன் பெற்றுள்ளார். இதுகுறித்து மசாக்கவுண்டருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். ஆரோக்கிய சார்லஸ், சுதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X