சிவகங்கையில் கோயில் நிலம் மீட்பு: மாஜி அமைச்சர் தொடர்பா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஜூன்
2021
10:44
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2021 10:43

சிவகங்கை: சிவகங்கையில், மாஜி அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படுபவர் ஆக்கிரமித்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.






சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கவுரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம், தஞ்சாவூர் - பைபாஸ் சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.








மாஜி அமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா ?







இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படும் பாண்டி என்பவர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டினார். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து,ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், நிலத்தை மீட்டு, கட்டடத்திற்கு சீல் வைத்ததுடன் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர். கோயில் நிலத்தை அபகரித்தவர் மாஜி அமைச்சர் பாஸ்கரனின் பினாமி என கூறப்படுகிறது. மாஜி அமைச்சருக்கு தொடர்பு இருக்குமானால் அவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.





பக்தர்கள் வரவேற்பு







திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்பதில் முக்கிய கவனம் செலுத்துவோம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார். இதன்படி சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. அடுத்து அடுத்து தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (50)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா
26-ஜூன்-202102:14:16 IST Report Abuse
Arv Sekar அப்படியே திமுக திருடர்களிடம் இருக்கும் கோயில் நிலத்தை மீட்டாள் நல்லா இருக்கும்
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
21-ஜூன்-202115:58:50 IST Report Abuse
KUMAR. S வட பழனி கோவில் நிலம் மீட்கப்பட்டது..மிக்க சந்தோசம்..அந்த இடம் இதுவரை யார் பிடியில் இருந்தது. அந்த இடத்தில பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு பணம் வசூல் செய்யப்பட்டது. அது எவ்வளவு? கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பே இல்லை..இது வரையிலும் ஆக்கிரமிப்பு பற்றி கோவில் நிர்வாகத்தினர் ஏன் புகார் தெரிவிக்கவில்லை? எந்த தகவலும் இல்லை..
Rate this:
Cancel
Th-yahooo.... - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூன்-202110:29:38 IST Report Abuse
Th-yahooo.... ஆக்ரமிப்பு இடங்களை மீட்டு அழகிய நந்தவனங்கள், மரங்கள் நட்டு வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X