இளமையில் கல்: உயர் கல்வியில் அசத்தும் துடிப்பான தலைமுறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஜூன்
2021
15:09
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2021 11:27

திருப்பூர்:'இளமையில் கல்' என்று சொல்வார்கள்; இதில், துவக்க, உயர்நிலை, மேல்நிலைக் கல்வியை மட்டுமின்றி, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பையும் தற்போது, சேர்த்து கொள்ள வேண்டும்.


திருப்பூரில், தற்போது, இளம் தொழிலாளரில் துவங்கி, தொழில்முனைவோர் வரை, உயர்கல்வி பெற்றவர்களாக மாறி வருகின்றனர். கல்வியின் சிறப்பு, அனுபவ அறிவுடன், தொழில்முனைவை சிறப்பாக்கி வருகிறது.உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், தமிழகம் தன்னிகரற்றதாக விளங்குகிறது.2019-20ம் ஆண்டு, நாடு முழுவதும், சராசரியாக, 27.1 சதவீதத்தினர், உயர்கல்வி சென்றுள்ளனர். தமிழகத்தில், அதற்கு இரு மடங்காக, 51.4 சதவீதத்தினர், உயர்கல்வியில், சேர்ந்திருக்கின்றனர்.சிக்கிம்(75.8 சதவீதம்), சண்டிகர்(52.1 சதவீதம்) மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தமிழகம் இந்த இடத்தை பெற்றிருக்கிறது. சிக்கிம், சண்டிகர் ஆகியன சிறிய மாநிலங்கள்; இவற்றுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் சாதனை பெரிதுதான்.


2019--20ம் ஆண்டு, 18 முதல் 23 வயது வரையிலானோரில், தமிழகத்தின் மக்கள்தொகை, 68.5 லட்சம்; இவர்களில், 35.2 லட்சம் பேர் உயர்கல்விக்கு சென்றிருக்கின்றனர். ஆராய்ச்சி படிப்பான பி.ெஹச்டி பட்டம் பெறுவதற்கான மாணவர் பதிவும் உயர்ந்திருக்கிறது.தமிழகத்தில், மொத்தம், 2,610 கல்லுாரிகள் உள்ளன. தனியார் கல்லுாரிகள், 77.6 சதவீதம். உயர்கல்வியின் கல்வித்தரமும் உயர்ந்து வருகிறது; வேலைவாய்ப்பு பெறவும், போட்டித்தேர்வை எதிர்கொள்ளவும் கல்லுாரிகள் மாணவர்களை தயார்ப்படுத்தி வருகின்றன.


திருப்பூர் இளைஞர்கள் சிலரிடம் கேட்டபோது, ''இளம் வயதில், இன்பம், துன்பம் எதுவந்தாலும், எண்ணத்தை செழுமையாக வைத்திருந்தால், கல்வியால் சாதிக்கலாம்; எதிர்காலத்தில், முன்னேறலாம்'' என்று நம்பிக்கை தெரிவித்தனர். 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று பாரதி பாடியது எவ்வளவு பெரிய உண்மை!


ஆறு மாதத்தில் கைகூடிய கலை!

ஊரடங்கு காலம், சாதிக்க நினைக்கும் மாணவர்களின் எண்ணங்களை நனவாக்குகிறது; திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்த நவீன், 'நிப்ட் டீ' கல்லுாரியில், அப்பேரல் பேஷன் டிசைன் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.


யூடியூப், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்து, கைகளால் பின்னல் பின்னும் நுட்பங்களை நன்கு கற்றார். சணல் கயிற்றை கைகளால் பின்னல் பின்னியும், முடிச்சு போட்டும், கதவு, ஜன்னல்களை மறைப்பதற்கான திரைச்சீலை; பொம்மைகள் வைப்பதற்கான குருவிக்கூடு; பேனா, மொபைல் ஸ்டாண்ட்; பூந்தொட்டிகளை தொங்கவிடும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடை; முக கவசம்; அழகிய விநாயகர் உருவம்; வீட்டு அலங்கார பொருட்கள் என, 20க்கும் மேற்பட்ட கைவினை பொருட்களை தயாரித்து அசத்துகிறார்.மாணவர் நவீன் கூறுகையில், ''ஆறே மாதங்களில், இந்த கலை எனக்கு கைகூடியது. ஊரடங்கு காரணமாக, பருத்தி நுால் கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக, மளிகை கடைகளில் சணல் எளிதாக கிடைத்தது. சணலை பயன்படுத்தி, வெவ்வேறு வகை கலை பொருட்களை உருவாக்கி, எங்கள் வீட்டை அழகுபடுத்தி வருகிறேன்'' என்கிறார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜூன்-202119:51:14 IST Report Abuse
sankaseshan என்னத்தை படிச்சு என்ன பிரயோஜனம் டாஸ்மாக் நாட்டுல ஒட்டு போடறது படிக்காதவனுக்கு தலையெழுத் து
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-202118:57:16 IST Report Abuse
Natarajan Ramanathan அதெல்லாம் சரிதான். ஆனால் பள்ளிப் படிப்பை முடித்து சொந்த தொழில் செய்யும் மற்ற மாநிலத்தவர்களிடம் முதுகலை படிப்பு முடித்த தமிழர்கள் குமாஸ்தா வேலைக்கு சேர்ந்து "முதலாளி" என்று குழைவதுதான் சகிக்கவில்லை.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
19-ஜூன்-202116:37:21 IST Report Abuse
Apposthalan samlin புதிய கல்வி கொள்கை எதற்கு? இன்று வெளி நாட்டில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் தமிழர்களே
Rate this:
sivan - seyyur,இந்தியா
19-ஜூன்-202116:47:43 IST Report Abuse
sivan புதிய கல்வி கொள்கை அதற்குத்தடங்.. உங்கள் ஈரோட்டான் சமூக நீதியால் ... பிற்பட்ட / தாழ்த்தப்பட்ட வகுப்பில் ஏற்கனவே சலுகை வாங்கிய குடும்பத்தினரே மறுபடி மறுபடி சலுகை வாங்கி மேலே மேலே வருகிறார்கள். பொறப்பட்ட டாகடர் மகாமன் டாக்டர்.. தாழ்த்தப்ப இன்ஜினியர் மகன் எஞ்சினியர் இப்படியே வாங்கியவர்கள் வாங்கி கொண்டிருந்தால் . பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பூ க்கரம்மாவின் மகன் .. ஆட்டோக்காரரின் மகன் எல்லாம் எப்போது முன்னேறுவது அதற்குத்தான் .. புதிய கல்வி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X