இளமையில் கல்: உயர் கல்வியில் அசத்தும் துடிப்பான தலைமுறை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
இளமையில் கல்: உயர் கல்வியில் அசத்தும் துடிப்பான தலைமுறை
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

19 ஜூன்
2021
15:09
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2021 11:27

திருப்பூர்:'இளமையில் கல்' என்று சொல்வார்கள்; இதில், துவக்க, உயர்நிலை, மேல்நிலைக் கல்வியை மட்டுமின்றி, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பையும் தற்போது, சேர்த்து கொள்ள வேண்டும்.


திருப்பூரில், தற்போது, இளம் தொழிலாளரில் துவங்கி, தொழில்முனைவோர் வரை, உயர்கல்வி பெற்றவர்களாக மாறி வருகின்றனர். கல்வியின் சிறப்பு, அனுபவ அறிவுடன், தொழில்முனைவை சிறப்பாக்கி வருகிறது.உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், தமிழகம் தன்னிகரற்றதாக விளங்குகிறது.2019-20ம் ஆண்டு, நாடு முழுவதும், சராசரியாக, 27.1 சதவீதத்தினர், உயர்கல்வி சென்றுள்ளனர். தமிழகத்தில், அதற்கு இரு மடங்காக, 51.4 சதவீதத்தினர், உயர்கல்வியில், சேர்ந்திருக்கின்றனர்.சிக்கிம்(75.8 சதவீதம்), சண்டிகர்(52.1 சதவீதம்) மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தமிழகம் இந்த இடத்தை பெற்றிருக்கிறது. சிக்கிம், சண்டிகர் ஆகியன சிறிய மாநிலங்கள்; இவற்றுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் சாதனை பெரிதுதான்.


2019--20ம் ஆண்டு, 18 முதல் 23 வயது வரையிலானோரில், தமிழகத்தின் மக்கள்தொகை, 68.5 லட்சம்; இவர்களில், 35.2 லட்சம் பேர் உயர்கல்விக்கு சென்றிருக்கின்றனர். ஆராய்ச்சி படிப்பான பி.ெஹச்டி பட்டம் பெறுவதற்கான மாணவர் பதிவும் உயர்ந்திருக்கிறது.தமிழகத்தில், மொத்தம், 2,610 கல்லுாரிகள் உள்ளன. தனியார் கல்லுாரிகள், 77.6 சதவீதம். உயர்கல்வியின் கல்வித்தரமும் உயர்ந்து வருகிறது; வேலைவாய்ப்பு பெறவும், போட்டித்தேர்வை எதிர்கொள்ளவும் கல்லுாரிகள் மாணவர்களை தயார்ப்படுத்தி வருகின்றன.


திருப்பூர் இளைஞர்கள் சிலரிடம் கேட்டபோது, ''இளம் வயதில், இன்பம், துன்பம் எதுவந்தாலும், எண்ணத்தை செழுமையாக வைத்திருந்தால், கல்வியால் சாதிக்கலாம்; எதிர்காலத்தில், முன்னேறலாம்'' என்று நம்பிக்கை தெரிவித்தனர். 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று பாரதி பாடியது எவ்வளவு பெரிய உண்மை!


ஆறு மாதத்தில் கைகூடிய கலை!





ஊரடங்கு காலம், சாதிக்க நினைக்கும் மாணவர்களின் எண்ணங்களை நனவாக்குகிறது; திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்த நவீன், 'நிப்ட் டீ' கல்லுாரியில், அப்பேரல் பேஷன் டிசைன் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.


யூடியூப், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்து, கைகளால் பின்னல் பின்னும் நுட்பங்களை நன்கு கற்றார். சணல் கயிற்றை கைகளால் பின்னல் பின்னியும், முடிச்சு போட்டும், கதவு, ஜன்னல்களை மறைப்பதற்கான திரைச்சீலை; பொம்மைகள் வைப்பதற்கான குருவிக்கூடு; பேனா, மொபைல் ஸ்டாண்ட்; பூந்தொட்டிகளை தொங்கவிடும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடை; முக கவசம்; அழகிய விநாயகர் உருவம்; வீட்டு அலங்கார பொருட்கள் என, 20க்கும் மேற்பட்ட கைவினை பொருட்களை தயாரித்து அசத்துகிறார்.



மாணவர் நவீன் கூறுகையில், ''ஆறே மாதங்களில், இந்த கலை எனக்கு கைகூடியது. ஊரடங்கு காரணமாக, பருத்தி நுால் கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக, மளிகை கடைகளில் சணல் எளிதாக கிடைத்தது. சணலை பயன்படுத்தி, வெவ்வேறு வகை கலை பொருட்களை உருவாக்கி, எங்கள் வீட்டை அழகுபடுத்தி வருகிறேன்'' என்கிறார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X