முதுமையில் வெல்: பெரியவர்கள் மீது அன்பு மழை பொழிவோம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஜூன்
2021
11:36
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2021 11:34

'ஒரு மனிதரின் ஆயுள்காலம், 120 ஆண்டுகள் என்கிறார்கள் யோகா பயிற்றுனர்கள்; ஆனால், பலருக்கு, நாற்பதாண்டை கடந்துவிட்டால்கூட, முதுமை வந்தது போன்ற உணர்வு தோன்றி விடுகிறது. அறுபது வயதை நெருங்கிவிட்டாலோ, கவலை கொள்ளத் துவங்கிவிடுகிறார்கள்.



திருப்பூரில் பலர், தொழில்துறையினராகவோ, தொழிலாளராகவோ இருப்பர்; காலில் சக்கரம் கட்டிக்கொண்டது போன்று, அவர்களது பணிச்சுமை இருக்கும். வீட்டில் உள்ள முதியவர்களை, பல நேரங்களில், கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருக்காது; இதனால் முதியவர்கள் சோர்ந்துதான் போகின்றனர். வாழ்வை விரக்தியாக உணர்கின்றனர்.


முதியவர்களை கவனித்துக்கொள்ளும் மகன்/மகள் இருந்தாலும் ஏதோ ஒருவகையில் மனதில், அவர்களிடம் நெருடல் இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரோ, பணம் இருந்தாலும், தங்கள் வீட்டு பெரியவர்களுக்கு வீட்டில் இடம் கொடுப்பதில்லை; அவர்களுக்கான இல்லங்களில், கொண்டு சேர்க்கின்றனர்.சிரவணனுடைய வரலாறு பலருக்கும் தெரியும். பார்வையற்ற தன் பெற்றோரை, அவர்கள் எண்ணியபடி, பல புண்ணிய தலங்களுக்கு, தொட்டில் கட்டி தோளிலே சுமந்து சென்றான் சிரவணன்.இது, மகாத்மா காந்தியடிகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது; தன் பெற்றோரை அவர் மதிக்க துவங்கினார்.



பெரியவர்களை நாம் எவ்வாறு பேணுகிறோம் என்பதை பார்த்து, நம் குழந்தைகள் நம்மை பேணுவார்கள் என்பது உண்மை. மூத்தோரின் உடல், மனத்திற்கான பாதுகாப்பை அவர்களது வாரிசுகள் வழங்க வேண்டும்; நம் உடலில் ஓடிக்கொண்டிருப்பது அவர்களது ரத்தம்தானே என்பதை பிள்ளைகள் உணர வேண்டும்.பெற்றோருக்கு உதவிகளை செய்யும்போது அன்பொழுகச் செய்ய வேண்டும்; முகத்தில் கடுமை காட்டினால், அவர்களது உள்ளம் கவலையுறும். முதுமையை வெல்வதற்கு பிள்ளைகள் துணைபுரிய வேண்டும்; அவர்கள் நாம் வாழ்வில் வெல்ல வழிகாட்டுவார்கள்!



மருத்துவமனையை எட்டிப்பார்த்து 16 வருஷமாச்சு!




சின்ன சின்ன உபாதைகள் என்றால் கூட, மருத்துவமனையை தேடி செல்வோர் பலர் இருக்க, பல முதியோர், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம், வாழ்க்கையை இனிமையாக கழிக்கின்றனர்.இதற்கு ஒர் உதாரணம், பல்லடம் - மங்கலம் ரோட்டை சேர்ந்த தம்பதி சுப்பையா, 71 --- - சின்னமணி, 68; 'தனியார் மில் சூப்பர்வைசரா வேலை பார்த்து, ஓய்வு பெற்றுட்டேன். ஒரு மகன், ஒரு மகள் இருக்காங்க. திருமணம் ஆயிடுச்சு; நாங்க தனியா தான் வசிக்கிறோம்; உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தணும்கறதுல எங்களுக்கு ஆர்வம் அதிகம். ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் 'வாழும் கலை' பயிற்சி கத்துக்கிட்டோம்; நாங்க, ஆஸ்பத்திரி சென்று, 16 வருஷமாச்சு. வீட்டில் தினசரி செய்யும் பயிற்சிகளே எங்களை ஆரோக்கியமாக வைத்துள்ளது.



தினசரி, நாடி சுத்தி , உஜய் மூச்சு, பஸ்கிரியா போன்ற மூச்சு பயிற்சிகளை தவறாமல் செய்கிறோம். எந்த நோயும் எங்களை அணுகல... இன்றைய சூழல்ல, மூச்சுக்கோளாறு இருக்கறவங்க ஏராளம்; மூச்சுப்பயிற்சி செஞ்சாலே, உயிர் இழப்பில் இருந்து தப்பலாம்' என்கிறார் சுப்பையா.

'வீட்டில் மாடித்தோட்டம் மூலம் காய்கறி, கீரை, மூலிகை செடி, பழம்னு இயற்கை முறையில வளர்க்கிறோம். வெளியே காய்கறி வாங்கற செலவு குறையுது; இயற்கை முறையில் விளைவிச்சதுங்கறதுனால, ஆரோக்கியத்துக்கு உதவுது. உடற்பயிற்சி மட்டுமின்றி, மாடித் தோட்டத்தை பராமரிக்கறதுலயும் கூடுதல் நேரம் ஒதுக்குவோம்' என்கிறார் சின்னமணி; அனுபவ பாடம்!

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X