போலீஸ் கமிஷனர் ஆபீசில் இருந்து பேசுவதாக மிரட்டி பணம் பறிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
02:05

திருப்பூர்:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அழைப்பதாக மிரட்டல் விடுத்து, திருப்பூரில் தொழிலாளியிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர், காலேஜ் ரோடு, காவிலிபாளையம் புதுாரை சேர்ந்தவர் ராஜூ, 42; பனியன் நிறுவனத்தில், டெய்லர். இவர் தனியார் நிதி நிறுவன இ.எம்.ஐ., கார்டு வாயிலாக பொருட்கள் பெற்று கடன் செலுத்தி வந்துள்ளார்.சமீபத்தில், இவரது கார்டு மூலம், நண்பர் ஒருவர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு கடையில், பொருட்களை வாங்கினார். இதற்கான தொகையை, ஐந்து மாதத்தில் செலுத்தி விட்டார்.கடந்த 17ம் தேதி ராஜூவுக்கு மொபைல் போனுக்கு பேசியவர், 'சென்னையில் இருந்து தனியார் நிதி நிறுவனத்தின் வக்கீல் பேசுகிறேன். மதியத்துக்குள், 4,275 ரூபாயை கட்ட வேண்டும்' என்றார். தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் அழைத்தார். 'உடனடியாக பணத்தை கட்டி விட்டு, கமிஷனர் அலுவலத்துக்கு 'பேக்ஸ்' கொடு. இல்லாவிட்டால், சிறை செல்ல நேரிடும்' என மிரட்டினார்.இதனால், பயப்பட்ட அவர், தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து கட்டினார். இது குறித்து நண்பர்களிடம் ராஜூ கூறியதற்கு, அவர்களின் அறிவுரையின் பேரில், வேலம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.சென்னை கமிஷனர் அலுவலகத்தை பயன்படுத்தி, பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ் கமிஷனர் வனிதாவிடம் கேட்டதற்கு, ''இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் விசாரித்து வருகிறார்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X