உவர்ப்பு நீரை பயன்படுத்தும் மக்கள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
உவர்ப்பு நீரை பயன்படுத்தும் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
05:31

முதுகுளத்துார்-முதுகுளத்துார் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கும்மேலாக உவர்ப்பு தண்ணீரை பயன்படுத்தி வருவதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே கீழப்பனையூர்,எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் காவிரி தண்ணீர் வசதியில்லாததால் கிராமமக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர்வெல்லில் வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். போர்வெல் தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால் டிராக்டர் தண்ணீரை ரூ.10க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.அரப்போது ஊராட்சி தலைவர் சரஸ்வதி கூறியதாவது:அரப்போது ஊராட்சிக்குட்பட்ட கீழப்பனையூர் கிராமத்திற்கு மருதகத்தில் இருந்து காவிரி தண்ணீர் வழங்க குழாய் அமைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனையடுத்து கிராமத்திற்கு கூடிய விரைவில் தண்ணீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X