நலத்திட்ட உதவி வழங்கல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
நலத்திட்ட உதவி வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
05:37

பரமக்குடி--பரமக்குடி ரோட்டரி சங்கத்தின் சார்பில் போலீசார் மற்றும் துாய்மைதொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.மாவட்ட தலைமை துணை ஆளுநர் சாதிக் அலி தலைமை வகித்தார். தலைவர் பன்னீர்செல்வம்,செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் நகராட்சியில் சானிடைசர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. டி.எஸ்.பி., வேல்முருகன் வாழ்த்தினார். முன்னாள் தலைவர்கள் அப்துல் மாலிக், அப்துல் அஜீஸ் மற்றும் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பரசுராமன் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X