குடிநீர் சப்ளை; ஏமாற்ற முடியாது! இணையத்தில் இடம், தேதி:மாநகராட்சி புதிய முயற்சி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
குடிநீர் சப்ளை; ஏமாற்ற முடியாது! இணையத்தில் இடம், தேதி:மாநகராட்சி புதிய முயற்சி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

21 ஜூன்
2021
02:11
பதிவு செய்த நாள்
ஜூன் 20,2021 22:39

திருப்பூர்:மாநகராட்சியில் குடிநீர் சப்ளை குறித்து இணைய தளத்தில் தகவல் அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. பகுதிவாரியாக மேல்நிலைத் தொட்டி அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வீடு மற்றும் வர்த்தக இணைப்புகளில் குடிநீர் வினியோகிக்கப்படும் நாள், நேரம் குறித்து எந்த விவரங்களும் வெளிப்படையாக இருப்பதில்லை.பகுதிவாரியான குடிநீர் ஆபரேட்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கிடைக்கப் பெறும் குடிநீரை தங்கள் வினியோகப் பகுதிக்கு திறந்து விடுவது வழக்கம். இதனால், குடிநீர் சப்ளையில் சீரான நிலை இருப்பதில்லை.


இது சில சமயங்களில் தவறு தலாகவும் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுவதும் வாடிக்கையாக உள்ளது. சில ஆபரேட்டர்கள் தங்கள் இஷ்டம் போல் தண்ணீர் திறந்து விடும் நிலை காணப்பட்டது.இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, மாநகராட்சி இணைய தளத்தில் பகுதிவாரியாக குடிநீர் சப்ளை செய்யும் விவரங்கள் தேதிவாரியாக பதிவேற்றம் செய்து வெளியிட உத்தரவிட்டார்.


அதன்படி, வரும் 30ம் தேதி வரை நான்கு மண்டலங்களிலும் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்படும் பகுதி குறித்தவிவரம் பதிவேற்றப் பட்டுள்ளது. மாநக ராட்சியின் https://www.tnurban.tn.gov.inஎன்ற இணையதளத்தில், சென்று தேதி வாரியாக குடிநீர் சப்ளை செய்யப்படும் பகுதி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.அதில் குறிப்பிட்டவாறு குடிநீர் சப்ளை இல்லை எனில் உரிய மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X