தயார்! வேகமெடுக்கும் 'சிங்கார சென்னை - 2' திட்டம் ... அறிக்கை தயாரிப்பில் மாநகராட்சி சுறுசுறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஜூன்
2021
06:22
பதிவு செய்த நாள்
ஜூன் 20,2021 22:40

'சிங்கார சென்னை - 2'திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள்தோறும் கழிப்பறை அமைக்க, மாநகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.



இத்திட்டம் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆலோசனைதமிழக முதல்வர் ஸ்டாலின் 20 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, 'சிங்கார சென்னை' திட்டத்தை கொண்டு வந்தார்.எனினும், அதன் பின் நடந்த ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது.



இந்நிலையில், தற்காலத்திற்கு ஏற்ப பல நவீன அம்சங்களுடன் 'சிங்கார சென்னை -- 2' திட்டத்தை செயல்படுத்த, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடிக்கு, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.அதன்படி, பல்வேறு துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து 'சிங்கார சென்னை 2' திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, மின் வாரியம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளிடம் மாநகராட்சி திட்ட அறிக்கை கேட்டுள்ளது.அந்த திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டப்பின், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 22 எம்.எல்.ஏ.,க்கள்; மூன்று எம்.பி.,களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.



பராமரிப்பு : இந்நிலையில், 'சிங்காரசென்னை 2' திட்டத்தில், பேருந்து நிறுத்தம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய கழிப்பறைகளை கொண்டு வர மாநகராடசி திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், பெரும்பாலான கழிப்பறைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, சிறுநீர் கழிக்க ௫ ரூபாய்; மலம் கழிக்க 10 ரூபாய் என, வசூல் வேட்டைநடந்தது.



ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின், பெரும்பாலான கழிப்பறைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்றன. அதனால், அனைத்து கழிப்பறைகளிலும், எவ்வித கட்டணமும் இன்றி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னைக்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்து செல்வோர் என, சராசரியாக, ஒரு கோடி பேர் உள்ளனர்.இவர்களில் 80 லட்சம் பேர் சென்னையை வாழ்விடமாக கொண்டவர்கள். எனவே, 'சிங்கார சென்னை - 2' திட்டத்தில் கழிப்பறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய, அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், கழிப்பறை அமைக்கப்படும். இலவசம்மேலும், மக்கள் கூடும் சுற்றுலா பகுதிகள், பூங்காக்கள் என, பெரும்பாலான இடங்களில், மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் கழிப்பறை கட்டப்படும். தரைதளத்தில் கழிப்பறையும், அதற்குமேல் தளங்களில், கடைகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படும் வகையில், இதற்கான பிரத்யேக கட்டடம் கட்டப்படும். இதற்கான பராமரிப்பு செலவையும், அந்நிறுவனங்களே மேற்கொள்ளும். எனவே, கழிப்பறைகளை பராமரிக்க, துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவர். அதனால், தங்கள் வீட்டு கழிப்பறை போல் துாய்மையாக இருக்கும் கழிப்பறையை இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
22-ஜூன்-202106:27:47 IST Report Abuse
Manian ஏலே ராசுக் குட்டி, நம்ம வூட்டுக்கு வேணுங்கதை லவட்டியாந்திரு. அரசியல், களகத் திருடங்க முந்திடுவானுக. அண்ணே தாளமுத்து, அட்டையிலே பெயின்டு அடிச்ச தடுப்பெல்லாம் ரெடி. இதையகெல்லாம் மொத நாளே லபக்கி, நம்ம அட்டை சாமான்களை வைக்க வாட்சுமேன் அய்யாதொரைக்கு அட்வான்சு ஏற்கனவே கொடுத்தாச்சு
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
21-ஜூன்-202112:10:06 IST Report Abuse
Mohan திட்டம் போட்டு...
Rate this:
Cancel
SUNDAR - chennai,இந்தியா
21-ஜூன்-202110:22:49 IST Report Abuse
SUNDAR மிக அருமையான திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X