அறிவுரை பிடிக்காததால் நண்பரை கொன்றவர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
அறிவுரை பிடிக்காததால் நண்பரை கொன்றவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
22:42

ஆதம்பாக்கம் : ஆதம்பாக்கத்தில், பெயின்டர் தலையில் சிமென்ட் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த நண்பனை, போலீசார் கைது செய்தனர்.



ஆதம்பாக்கம், மண்ணடியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் எட்வின், 24. இவர், கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி, உறவினரான மணிகண்டன் என்பவரை அம்மி கல்லால் தாக்கி கொலை செய்தார்.சிறையில் இருந்த எட்வின், கடந்த 18ம் தேதி, ஜாமினில் வெளியே வந்தார். நேற்றுமுன்தினம் இரவு, நண்பர்களான பெயின்டர் அஜித்குமார், 21; ரவி, 22; தினேஷ், 21, ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து, மது விருந்து வைத்துள்ளார்.அப்போது எட்வினிடம், 'குற்ற செயல்களில் ஈடுபட்டு, ஜெயிலுக்கு செல்வது நல்லதல்ல; வாழ்க்கை பாழாகிவிடும்' என அஜித்குமார் அறிவுரை வழங்கினார்.



அவரது அறிவுரையை ஏற்காத எட்வின், அஜித்குமாருடன் தகராறு செய்துள்ளார். இவர்களை, ரவி, தினேஷ் ஆகியோர் சமாதானப்படுத்தி விட்டு, அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.அஜித்குமார் அங்கேயே தங்கினார். எட்வினும், அஜித்குமாரும், நள்ளிரவு வரை மது அருந்தி உள்ளனர். மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த எட்வின், சிமென்ட் பூந்தொட்டியை அஜித்குமார் தலையில் போட்டு அவரை கொலை செய்தார்.பின், ரவி வீட்டுக்கு சென்று கொலை செய்ததை கூறிவிட்டு, அங்கிருந்து தலைமறைவானார். ஆதம்பாக்கம் போலீசார், நேற்று எட்வினை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X