பணிமனையில் பஸ்கள் பராமரிப்பு எந்த நேரத்திலும் இயக்க தயார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
00:56

உடுமலை:பணிமனைகளில் தொடர்ந்து பல நாட்களாக நிறுத்தி வைக்கப்படும் அரசு பஸ்கள், எந்த நேரத்திலும் இயக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்துக்கழகம், திருப்பூர் மண்டலத்தில் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, திருப்பூர், காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பணிமனைகள் உள்ளன.ஊரடங்கால், ஒரு மாதத்துக்கும் மேலாக பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் வருகின்றன. அதில், பஸ்களை இயக்குவதற்கான அனுமதி கிடைத்தால், எந்த நேரத்திலும் பஸ்களை இயக்கும் வகையில், பழுது ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, பராமரிக்கப்பட்டுவருகின்றன.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: ஊரடங்கு நிறைவு பெற்றால் மட்டுமே பஸ்களை பகுதியளவோ, முழுமையாகவோ இயக்க அனுமதி அளிக்கப்படும். உடனடியாக பஸ்களை இயக்கும் வகையில் தொழில்நுட்பப் பணியாளர்களால் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறது.நீண்ட நாட்கள் பஸ்கள் ஓடாமல் இருந்தால், பழுது ஏற்பட வாய்ப்பு அதிகம். பஸ்களை டெப்போ வளாகத்துக்குள்ளேயே இயக்கி, டயர்கள், பேட்டரி போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.அதேபோல், சுழற்சி முறையில் டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு, தினமும், பஸ்களை இடம் மாற்றி நிறுத்தப்படுகிறது. இதனால், பஸ்களுக்குள் எலிகள் புகுவதும் தடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X