4 தாலுகாக்களில் 89 பேருக்கு கொரோனா | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
4 தாலுகாக்களில் 89 பேருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
01:07

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நான்கு தாலுகாக்களில், 89 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, மரப்பேட்டை வீதி, காமாட்சி நகர், வள்ளியம்மாள் லே - அவுட், குமரன் நகர் லே - அவுட், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஜமீன் கோட்டாம்பட்டி, சமத்துார், மாக்கினாம்பட்டி, ஆவல்சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கே. நாகூர் உள்ளிட்ட பகுதிகளில், தலா ஒருவர்; கோலார்பட்டியில் இருவர்; ஏ. நாகூரில் மூவர்; ஜமீன் ஊத்துக்குளியில், ஐந்து பேர் என மொத்தம், 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, புளியம்பட்டி, கோபாலையன்புதுார், பனிக்கம்பட்டி, ஆச்சிப்பட்டி, குரும்பம்பாளையம், மண்ணுார், ஜமீன்முத்துார், நாதேகவுண்டன்புதுார், குளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் தலா, ஒருவர்; நல்லுார், ஓரக்கலியூர், ஆவலப்பம்பட்டி, நெகமத்தில் தலா இருவர்; திப்பம்பட்டியில் மூவர் என, மொத்தம், 20 பேருக்கு தொற்று உறுதியானது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தாலுகாவில், நேற்று முன்தினம், 9 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று, செங்குட்டைபாளையம், சொலவம்பாளையம், பனப்பட்டி, கல்லாபுரம், நல்லிக்கவுண்டன்பாளையம், கிணத்துக்கடவு பெரியார்நகர், அரசம்பாளையம் பிரிவு, மூட்டாம்பாளையம், சிக்கலாம்பாளையம், நல்லட்டிபாளையம் கிராமங்களை சேர்ந்த, 13 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.ஆனைமலைஆனைமலை தாலுகா பகுதிகளில், நேற்று முன்தினம், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று, ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், பெரியபோது உள்பட, 16 பகுதிகளில், 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்தவர்களுடன் தங்கி இருந்தவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா, என, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.வால்பாறைவால்பாறை தாலுகாவில், காடம்பாறை, வால்பாறை நகர் ஆகிய இடங்களில் இரண்டு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்தோரின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களில், 89 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X