பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க ஆர்.டி.ஓ.,க்கள் இடையே போட்டா போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
05:45

உளுந்துார்பேட்டை, : உளுந்தூர்பேட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிப்பதில் 2 ஆர்.டி.ஓ., க்களிடையே போட்டா போட்டி நிலவியதால், ஆவேசமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சியைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மனைவி சிவசக்தி, 22; திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. சாய் கிருஷ்ணா என்ற 2 வயது குழந்தை உள்ளது.குடிப்பழக்கத்திற்கு அடிமையான அழகப்பன், அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். பலமுறை கண்டித்தும் அவர் குடிப்பழக்கத்தை விடவில்லை. நேற்று முன்தினம் வழக்கம்போல் குடித்து விட்டு வந்ததால், மனமுடைந்த சிவசக்தி, வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார்.உடன் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிவசக்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், சிவசக்தி இறப்பு குறித்து விசாரணையும், பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்க திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ, சாய்வர்தினி, விழுப்புரம் ஆர்.டி.ஓ,, ஹரிதாசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால், திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., தான் ஒப்புதல் அளிக்கவேண்டும் எனக்கூறி விழுப்புரம் ஆர்.டி.ஓ,, பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார்.



இதனால், பிரேத பரிசோதனை செய்து சிவசக்தியின் உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த சிவசக்தியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:00 மணியளவில் செங்குறிச்சியில் சென்னை - உளுந்துார் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 5:10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.அதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், விழுப்புரம் கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஹரிதாஸ், பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தார். அதன்பேரில், இரவு 9:00 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X