அ.தி.மு.க.,வுக்கும் சசிகலாவுக்கு சம்பந்தம் இல்லை கோவையில் அ.தி.மு.க., தீர்மானம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
15:03



கோவை : 'கட்சியை அபகரிக்க வஞ்சக வலை விரிக்கும் சசிகலாவுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எவ்வித தொடர்போ, சம்பந்தமோ இல்லை' என, அ.தி.மு.க.,வினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. சட்டசபை அ.தி.மு.க., கொறடா வேலுமணி தலைமை வகித்து பேசுகையில்,''அ.தி.மு.க.,வுக்கு, கோவை மாவட்ட மக்கள் தொடர்ந்து அங்கீகாரம் அளித்து வருகின்றனர். இங்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதுடன், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினோம். இன்று மோசமான நிலை உள்ளது. மருத்துவமனைகளில் உயிர் பலி மறைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாநகராட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும்,'' என்றார்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:



அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக சசிகலா பகிரங்கமாக அறிவித்தார். சட்டசபை தேர்தலுக்கு பிறகு இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., ஆகியோரது தலைமையில், அ.தி.மு.க., வலுவும், செல்வாக்கும் பெற்றுள்ளது. இதைப்பார்த்து, கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக தினமும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக சசிகலா நாடகத்தை அரகேற்றிவருகிறார்.



சசிகலா அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை.தொலைபேசியில் ஜாதிய உணர்வுகளை துாண்டும் வகையில் பேசுவது, கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.




கட்சியை அபகரித்துவிட வஞ்சக வலை விரிக்கும் சசிகலாவுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எவ்வித தொடர்போ, சம்பந்தமோ இல்லை. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கியதை வரவேற்கிறோம்.



அதிக அளவிலான கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் பொய் வழக்குகள் போட காரணமான, தி.மு.க.,வை வன்மையாக கண்டிக்கிறோம்.



இவ்வாறு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், ஜெயராம், அருண்குமார், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X