அச்சுறுத்தும் 'டிரான்ஸ்பார்மர்' உடைந்து தொங்கும் மின்கம்பம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அச்சுறுத்தும் 'டிரான்ஸ்பார்மர்' உடைந்து தொங்கும் மின்கம்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
22:17

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, தெப்பக்குளம் அருகே மின்கம்பம் உடைந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.பொள்ளாச்சி நகராட்சி, தெப்பக்குளம் அருகே கோட்டூர் ரோடு இணைப்புச்சாலை உள்ளது. இந்த ரோட்டில், தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், தெப்பக்குளம் அருகே உள்ள மின்கம்பம் உடைந்து ஊசலாடியபடி உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'மின்கம்பத்தின் மேற்பகுதி உடைந்து ஊசலாடுகிறது; மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், மின்கம்பத்தை அகற்ற எவ்வித நடவடிக்கையும் இல்லை.கம்பம் உடைந்து தொங்குவதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அசம்பாவிதங்கள் தவிர்க்க, கம்பத்தை அகற்ற வேண்டும்,' என்றனர்.உதிரும் கம்பம்பொள்ளாச்சி, கருமாண்டகவுண்டனுார் - கொங்கநாட்டான்புதுார் இடையே, ஓடைக்கரை அருகே, டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. டிரான்ஸ்பார்மரின், மின்கம்பங்களில் ஒன்று, கான்கிரீட் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிவதோடு, கம்பம் உறுதி இழந்துள்ளது.தென்மேற்கு பருவமழை பெய்யும் நிலையில், பலத்த காற்றும் வீசுவதால், கம்பத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. டிரான்ஸ்பார்மர் சாய்ந்து விபத்து ஏற்படுவதற்குள், கம்பத்தை மாற்ற வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X