கண்துடைப்பு பணியால் பயனில்லை: மக்கள் அதிருப்தி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கண்துடைப்பு பணியால் பயனில்லை: மக்கள் அதிருப்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
22:18

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - மீன்கரை ரோடு, ரயில்வே பாலம் ஓடுதளத்தில் அரைகுறை சீரமைப்பு பணியால் வாகன ஓட்டுனர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், சீனிவாசபுரத்தில் ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து, 26.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது.பொள்ளாச்சி - ஆனைமலை, திருச்சூர், சேத்துமடை, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பாலம் வழியாக செல்கின்றன.பாலத்தின் ஓடுதளம் அடிக்கடி பெயர்ந்து விடுகிறது. பாலத்தில் சிமென்ட் கலவை பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.இந்நிலையில், மீண்டும் மீண்டும் ஓடுதளத்தில் பல இடங்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உருமாறியது. கான்கிரீட் கம்பிகள் வெளியே பெயர்ந்து, விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அங்கு தார் கொட்டப்பட்டு அரைகுறையாக சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி - மீன்கரை ரோடு பாலத்தில், ஓடுதளம் தரமின்றியுள்ளதால், மோசமாகி வருகிறது. மழை பெய்தால், ரோட்டில் குழி உருவாவதை கண்டாலே பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் ஓடுதளத்தின் தரம் வெளிப்படுகிறது.தற்போது ஏற்பட்ட குழியும், கண்துடைப்புக்கு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது எத்தனை நாளுக்கு தாக்குப்பிடிக்கும் என தெரியவில்லை.மேலும், ஓடுதளத்தில் வாகனங்கள் செல்லும் போது, அதிர்வு காரணமாக தளம் பெயர்கிறது. இந்த பாலம் கட்டப்பட்டதில் இருந்து, சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டே தான் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண, அதிகாரிகள் மனது வைத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X