'தினமலர்' அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'தினமலர்' அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
01:22

கோவை:கோவை, 'தினமலர்' அலுவலகத்தில் நேற்று நடந்த, சிறப்பு முகாமில், 397 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.கோவையில் கொரோனா தொற்று பரவல், கடந்த சில நாட்களாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரு நாட்களாக, தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 1,000க்குள் வருகிறது.மூன்றாவது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக, மருத்துவ வல்லுநர்கள் எச்சரிப்பதால், 18 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென, சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.மாநகராட்சி சார்பில், நகர் நல அலுவலர் ராஜா ஏற்பாட்டில், 'தினமலர்' அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது; டாக்டர் தினேஷ் பெரியசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.'தினமலர்' ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், ஏஜன்ட்டுகள், லைன்பாய்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், 18 முதல், 44 வயதினரில், 274 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோரில், 123 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X