ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம்: கவர்னர்கள் உரையால் விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
01:26

பொள்ளாச்சி:'தமிழக, கேரள மாநில கவர்னர்கள் உரையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காலம் தாழ்த்தாமல் பேச்சு நடத்தி, உடனடியாக திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பி.ஏ.பி., விவசாயிகள் தெரிவித்தனர்.கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசன திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. கேரள மாநிலத்தில், இடைமலையாறு அணை கட்டிய பின், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்ட வேண்டும், என்பது ஒப்பந்தம்.இடைமலையாறு அணை கட்டப்பட்ட நிலையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தினர்.கடந்த ஆட்சியில், இருமாநில முதல்வர்கள் சந்திப்புக்கு பின், பேச்சு நடத்த அதிகாரிகள் அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், தி.மு.க., இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, நேற்று சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறுகையில், ''நீர் வளம் காக்க நீர்வளத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டுவதற்கு பேச்சு நடத்தப்படும் என அறிவிப்பு, இரு மாநில சட்டசபையிலும், கவர்னர் உரைகளில் இடம் பெற்றுள்ளது. இரு அரசுகளும் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு மாநில அரசுகளும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேச்சு நடத்தி இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X