இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவவீரர்: விருதுநகரில் குடும்பத்துடன் 100 வது பிறந்தநாள்கொண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
05:20

விருதுநகர் : விருதுநகரில் நுாறாவது பிறந்த நாளை இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஓய்வு ராணுவ வீரர் குடும்பத்துடன் கொண்டாடினார்.



விருதுநகர் என்.ஜி.ஓ.,காலனி கங்கை தெருவை சேர்ந்தவர் நீலமேகம். 1922 ஜூன் 21ல் பிறந்தார். 1941 -- 47 வரை இந்திய ராணுவத்தில் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். 1946ல் இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் ஜாவா தீவு, சிங்கப்பூர் நாடுகளில் நடந்த போரில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக இந்திய ராணுவம் கடல் வழி பயணம் மேற்கொண்டது. இதில் பங்கேற்ற ராணுவவீரர்களில் இவரும் ஒருவர்.



1947க்கு பின் ஓய்வு பெற்ற இவர் விருதுநகர் வந்தார். சொந்தமாக ரேடியோ ரிப்பேர் செய்யும் கடையை நடத்தி வந்தார். வயதான பின் தொழிலை பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 99 வயது முடிந்து நுாறாவது பிறந்தநாள் துவங்கியதை யொட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினார்.



3 மகன்கள், 2 மகள்கள், 5 பேரன்கள், 4 பேத்திகள், 4 கொள்ளு பேரன்கள், 8 கொள்ளு பேத்திகள் என பெரிய குடும்பமே உள்ளது. தற்போது வரை நல்ல செவி, பார்வைத்திறனுடன் சகஜமாக பேசி வருகிறார். ஜீலம் முதல் ஜகார்த்தா வரை என தன் போர்கால அனுபவங்கள் குறித்து சுயசரிதை புத்தகமும் எழுதி வருகிறார்.



நீலமேகம் கூறியதாவது: ஆரோக்கியமான வாழ்விற்கு கட்டுப்பாடுகள் அவசியம். ஆரோக்கியம், ஒழுக்கம் என தனிமனிதன் தன்னை முழுமையாக கவனித்து கொள்ளும் போது அவன் ஆயுள் அவனுக்கு வசப்படுகிறது. அனைவரும் தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டாலே நிறைவான வாழ்வு வாழ முடியும், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
26-ஜூன்-202112:40:01 IST Report Abuse
தமிழன் நமக்காக இரத்தம் சிந்த தயாராய் இருந்த இவர்கள் தான் இந்திய ஒன்றியத்தின் உண்மையான விசுவாசிகள் ... என்றென்றும் நீடூழி வாழ்க.. உங்களை போன்றவர்கள் இருந்தால்தான் எங்களுக்கு ஒரு உத்வேகம்..
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
25-ஜூன்-202118:03:27 IST Report Abuse
karutthu நூறாண்டு கண்டு வாழ்ந்துவரும் பெரியவரை வணங்குவோம் .....நீடூடி வாழ்க என வாழ்த்துவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X