வீடு புகுந்து கொள்ளை அடித்த 5 பேர் கைது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
வீடு புகுந்து கொள்ளை அடித்த 5 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
07:46

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வீடுபுகுந்து 40 பவுன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.



திண்டுக்கல் அருகே மாலப்பட்டியை அடுத்த காமாட்சி நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் 40. ஜூன் 11ம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல், 40 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது.எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில், சப்இன்ஸ்பெக்டர்கள் பொன் குணசேகர், அழகர்சாமியுடன் தனிப்படை அமைக்கப்பட்டது.



இவர்கள் பள்ளபட்டி அருகே டூவீலரில் வந்த இருவரிடம் விசாரித்ததில் மாலபட்டியில் நடந்த திருட்டுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்படி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபுத்திரன் 34, சாமியார் தோட்டத்தை சேர்ந்த சாமிநாதன் 36, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களின் பெயர்கள் தெரியவந்தது. இந்திரா நகரில் பதுங்கி யிருந்த மேட்டுப்பட்டி வினோத் 34, நாகம்மாள் தெரு ஹரிபிரசாத் 25, காமாட்சிநகர் ரமேஷ்ராஜா 34, ஆகிய ஐவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகை, ரூ.15 லட்சம் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X