செய்தி சில வரிகளில்... | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
செய்தி சில வரிகளில்...
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
23:13

மாணவர்களுக்கு பாராட்டுசெஞ்சி: செஞ்சி கல்வி மாவட்டத்தில் நடந்த தேசிய திறன் அறியும் தேர்வில் 84 பள்ளிகளைச் சேர்ந்த 1,268 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 71 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதில் கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மாணவர்களும், அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா பாராட்டி பரிசு வழங்கினார்.தடுப்பூசி முகாம்விக்கிரவாண்டி: கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வாக்கூர், கப்பியாம்புலியூர், ஒரத்துார், பாப்பனப்பட்டு உள்ளிட்ட 10 இடங்களில் நேற்று முன்தினம் வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர்கள் ராமகிருஷ்ணன், ஆறுமுகம், அர்ச்சனா, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 826 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டம்விழுப்புரம்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சங்கரன், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துக்குமரன் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், நுாறு நாள் வேலைத் திட்டத்தில் குடும்பத்திற்கு ஆண்டிற்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தீ தடுப்பு பயிற்சிஅவலுார்பேட்டை: மேல்மலையனுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீ தடுப்பு பயிற்சியில் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். கோவில் பணியாளர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு குறித்து செயல் முறை பயிற்சி வழங்கினர்.மேலும், கோவிலில் தீ விபத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தணிக்கையும் நடந்தது.கூடுதல் செவிலியர்: எம்.பி., கோரிக்கைவானுார்: வானுார் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி., கலெக்டர் மோகனுக்கு, அனுப்பியுள்ள கடிதம்:வானுாரில் 42 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு வட்டார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புதிய புற நோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டித்தர வேண்டும். மேலும், நான்கு டாக்டர்கள், ஒரு செவிலியர் கண்காணிப்பாளர், ஏழு செவிலியர்கள், 10 மருத்துவமனை ஊழியர்கள் நியமித்து தர வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.உலக யோகா தினம்விழுப்புரம்: மத்திய அரசின் ஆயுஷ் அமைப்பின் தமிழ்நாடு யோகாசன சங்க விழுப்புரம் மாவட்ட கிளை சார்பில் உலக யோகா தினத்தையொட்டி, விழுப்புரம் சங்கரமடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, யோகாசன சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா அமைப்பின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் துவக்கி வைத்தார். டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில், சூரிய நமஸ்காரம், யோகாவில் நின்ற நிலை, அமர்ந்த நிலை, படுத்த நிலை மற்றும் குப்புற படுத்த நிலை, மூச்சு பயிற்சி செய்யப்பட்டது.மாணவர் சேர்க்கைவிக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளி தலைமை ஆசிரியர் தேவநேசன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கையை துவங்கி பாட புத்தகம் வழங்கப்பட்டது.ஆசிரியைகள் மாலினி, புவனேஸ்வரி, கல்வி மேலாண்மைக் குழுத்தலைவர் மேனகா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டம்விழுப்புரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் அறிவழகன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, இறுதி சடங்கு செலுத்தி கோஷம் எழுப்பினர்.டிரான்ஸ்பார்மர் கீழே குப்பைக்கு தீகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விதை சுத்திகரிப்பு நிலையத்தின் குப்பைகள் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும் போது சேகரிக்கப்படும் குப்பைகள் சுற்றுச் சுவர் ஓரம் உள்ள டிரான்ஸ்பார்மர் கீழே கொட்டப்படுகிறது.குப்பைகள் அதிகளவில் சேரும்போது தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது தீ கொழுந்து விட்டு எரியும் போது, டிரான்ஸ்பார்மர் வெடித்து பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.எனவே, விதை சுத்திகரிப்பு நிலைய வளாகம் பகுதியில், டிரான்ஸ்பார்மர் அருகே குப்பைகள் தீயிட்டு கொளுத்துவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிவாரண பொருட்கள் வந்தனகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரண்டாவது தவணை தொகை 2,000 ரூபாய் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி கடந்த 15ம் தேதி முதல் துவங்கியது.ஆனால் 50 சதவீத பொருட்கள் மட்டுமே வந்திருந்ததால், நிதி மற்றும் பொருட்கள் வழங்கும் பணி சில தினங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அரசின் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நேற்று முன்தினம் முதல் லாரி மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.மருத்துவ முகாம்திண்டிவனம்: நகராட்சியுடன் இணைந்து நடத்திய முகாமை, ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி அமைப்பின் மக்கள் தொடர்பு இணை பொறுப்பாளர் பிரபு தொடங்கி வைத்தார்.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், பா.ஜ., நகர தலைவர் தினேஷ்குமார், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திகேயன், அருள்குமார், ராதிகா, பாலாஜி, தரணி உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பொது மக்கள் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X