கிரைம் செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
23:15

சிறுமியை கடத்தமுயன்றவர் கைது



உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சூரியபிரகாஷ், 18; பிளஸ் 2, முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இவர், நேற்று முன்தினம் 13 வயது சிறுமியை, வயல்வெளி பக்கம் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார்.

இதனைப்பார்த்த சிறுமியின் பெற்றோர் துரத்திச் சென்றபோது சிறுமியை விட்டு விட்டு சூரியபிரகாஷ் தப்பியோடினார்.சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார், சிறுமியை கடத்தியதாக வழக்குப் பதிந்து சூரியபிரகாஷை கைது செய்தனர்.



போதையில் விழுந்தவர் பலி



ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சீர்பாதநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் எழிலரசன், 26; பெரியக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் முருகன். இருவரும் கடந்த 18ம் தேதி மதியம் புஷ்பகிரி குளத்திற்கு அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எழிலரசன் படுகாயமடைந்தார்.

உடன், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி எழிலரசன் நேற்று இறந்தார். பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.



தடுப்பு சுவரில் மோதி வாலிபர் பலி



வானுார்: மயிலம் அடுத்த முட்டியூரைச் சேர்ந்தவர் வேலு மகன் காளிதாஸ், 37; இவர் நேற்று முன்தினம் புதுச்சேரியில் மது அருந்தி விட்டு, பைக்கில், புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

கிளியனுார் அடுத்த கேணிப்பட்டு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முத்தினம் இரவு இறந்தார்.



பணம் கேட்ட தகராறில் ஒருவர் கைது



விழுப்புரம்: விழுப்புரம், சாலாமேட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 42; இவர், ஆசாகுளத்தைச் சேர்ந்த செந்தில், 44; என்பவரிடம் லேப் டாப் வாங்கித்தரும்படி கடந்த 4 மாதங்களுக்கு முன், 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

செந்தில் லேப் டாப் வாங்கித்தராமல், பணத்தையும் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக்கேட்ட வெங்கடேசனை, செந்தில் திட்டி தாக்கினார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்தனர்.



நண்பரை தாக்கியவர் மீது வழக்கு



விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் வினாயகமுருகன், 33; இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் ரவி, என்பவருடன் தாயம் விளையாடினார். அப்போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வினாயகமுருகனை, ரவி திட்டி தாக்கினார். புகாரின்பேரில், ரவி மீது வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு



மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 68; விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை சொந்த வேலையாக வீட்டில் இருந்து திண்டிவனம் நோக்கி தனது டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார்.

கூட்டேரிப்பட்டு, தீவனுார் சாலையில் பெரமண்டூர் அருகே சாலையோரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். மயிலம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



பெண்ணைத் தாக்கிய தம்பதி கைது



விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கண்டமானடியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது அண்ணன் ராமதாஸ், 63; இருவருக்குமிடையே வீட்டுமனை பாகம் பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ராமதாஸ், இவரது மனைவி மின்னல்கொடி, 55; ஆகியோர் சகாதேவன் மனைவி அலமேலுவை திட்டி தாக்கினர்.அலமேலு, 49; கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ், மின்னல்கொடி, 55; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



பெண்ணிடம் தகராறு: 2 பேர் கைது



ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மனைவி அலமேலு, 55; இவரிடம் கடந்த 19ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் குப்பன், 25; அதே பகுதியைச் சேர்ந்த எழுமலை மகன் கார்த்தி, 22; ஆகியோர் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து, குப்பன், கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.



தம்பதியை தாக்கிய2 பேர் மீது வழக்கு



விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கண்டமானடியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மோகனா, 40; இவர் கடந்த 21ம் தேதி தனது வீட்டு குப்பையை அதே பகுதியை சேர்ந்த உறவினர் மோகன் வீட்டு முன்பு கொட்டினார். இதனால், ஏற்பட்ட தகராறில் மோகனா மற்றும் முருகனை, மோகன் மற்றும் அவரது உறவினர் ஜெயபால் ஆகியோர் தாக்கினர்.

புகாரின்பேரில், மோகன், ஜெயபால் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.



முதியவர் சாவு



விழுப்புரம்: விழுப்புரம் உழவர் சந்தை அருகே கடந்த 19ம் தேதி சதாசிவம், 60; என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 20ம் தேதி இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X