கொரோனா தொற்று இறப்பு சதவீதம் அதிகரிப்பு! 82 நாட்களில் 435 பேர் இறந்ததால் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
23:25

கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி கண்டறியப்பட்டது. அன்று முதல் கடந்த 2021 மார்ச் 31ம் தேதி வரை ஓராண்டில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 139 பேருக்கு பரிசோதனை செய்ததில் 25 ஆயிரத்து 706 பேருக்கு தொற்றும், இறப்பு எண்ணிக்கை 291 ஆகவும் இருந்தது. அப்போது இறப்பு சதவீதம் 1.13 ஆக இருந்தது.



இந்நிலையில், கொரோனா தொற்று இரண்டாவது அலை மாவட்டத்தில் வேகமாக பரவியது.கடந்த இரண்டு மாதங்களில் தினசரி பாதிப்பு 500 முதல் 800க்கும் அதிகமாக இருந்தது. கடந்த மே மாதம் 21ம் தேதி அதிகளவாக 864 பேருக்கு தொற்று உறுதியாகி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.



கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 82 நாட்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 53 பேருக்கு பரிசோதனை செய்ததில், 28 ஆயிரத்து 781 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இறப்பு சதவீதமும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரித்தது. தினசரி 5 முதல் 15 பேர் வரை சிகிச்சை பலனின்றி இறந்தனர்.



அதிகபட்சமாக ஏப்., 29ம் தேதி 17 பேரும், மே மாதம் 1ம் தேதி 20 பேர், 5ம் தேதி 15 பேர், 11ம் தேதி 23 பேர், 15ம் தேதி 19 பேர் இறந்தனர். ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை 435 பேர் இறந்துள்ளனர். இறப்பு சதவீதம் 1.41 ஆக உள்ளது.அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் சதவீதமும் அதிகரித்துள்ளது. இது வரை 54 ஆயிரத்து 171 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 1,500 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.



கடலுார் மாவட்டத்தில் மொத்தமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 71 ஆயிரத்து 192 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 56 ஆயிரத்து 728 பேருக்கு தொற்று உறுதியானது. 8 லட்சத்து 24 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று இல்லை.இது வரை 726 பேர் இறந்துள்ளனர். இதன் மொத்த இறப்பு சதவீதம் 1.27 ஆக உள்ளது.இதற்கிடையே மாவட்டத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறையவில்லை.



கடந்த மே மாதத்தில் ஒரே நாளில் 850 பேருக்கும் அதிகமாக தொற்று உறுதியான நிலையில், கடந்த 19ம் தேதி 211 பேர், 20ம் தேதி 197 நபர், 21ம் தேதி 189 பேருக்கு தொற்று பாதிப்பு என படிப்படியாக குறைகிறது. ஆனால் 19ம் தேதி 7 பேர், 20ம் தேதி 5 பேர், 21ம் தேதி 7 பேர் இறந்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X