மாடு மோதி கீழே விழுந்தவர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
மாடு மோதி கீழே விழுந்தவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
07:33

புவனகிரி : கீரப்பாளையம் அருகே பைக்கில் சென்றவர் சாலையின் குறுக்கே மாடுகள் சண்டையிட்டதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து இறந்தார்.



புவனகிரி சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,55; விவசாயி, நேற்று முன் தினம் பைக்கில் சிதம்பரம்-புவனகிரி சாலையில் சென்றார். கீரப்பாளையம் அருகில் சாலையின் குறுக்கே மாடுகள் சண்டையிட்டு ஓடி வந்ததில் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதின. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.



மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இறந்தவரின் உறவினர் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X