மாற்றுத் திறனாளிகள் சங்கம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு | கடலூர் செய்திகள் | Dinamalar
மாற்றுத் திறனாளிகள் சங்கம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
07:35

கடலுார் : மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று புகார் அளிக்க அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சாய்வு தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலசங்கத்தினர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்த மனு: மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து கொடுக்கும் புகார்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி புகார் அளிக்க அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சாய்வு தளம் அமைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் வர எஸ்.பி., அலுவலகத்தில் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X