மழை நீர் தேங்காமல் தடுக்க திட்டம் வருவாய் கமிஷனருக்கு உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
00:33

சென்னை-'சென்னையில் மழை நீர் தேங்காமல் தடுப்பதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்' என, வருவாய் நிர்வாக கமிஷனருக்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில், 2020 நவ., மாதம் பெய்த மழையால், மாநகரின் பல இடங்களில் மழை நீர்தேங்கியது.இதுகுறித்து, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் அடங்கிய, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.இக்குழு, மழை நீர் தேக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கான, ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதை கண்காணிக்க, தலைமை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் கே.சத்யகோபால் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பொதுப் பணித்துறை தாக்கல் செய்த அறிக்கை, சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கும் மழை நீர் பிரச்னையை தீர்க்க உதவாது.உள்ளாட்சி அமைப்புகளும், அன்றாட பராமரிப்பு பணி குறித்து தான், அறிக்கை தாக்கல் செய்கின்றனர். பிரச்னையை தீர்க்க, யாரிடமும் திட்டமில்லை.இதனால், வருவாய் நிர்வாக கமிஷனர், வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இவர், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், வெள்ளம் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடனான கூட்டம் நடத்தி, இப்பகுதிகளில் மழை நீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க, உரிய செயல் திட்டத்தை உருவாக்கி, முறையாக அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை, ஆக., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X