கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு போலீசார் வெடிக்க வைத்து அழிப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு போலீசார் வெடிக்க வைத்து அழிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
00:34

விருகம்பாக்கம்- -விருகம்பாக்கத்தில் மீட்கப்பட்ட இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை, நேற்று மாலை மிக பாதுகாப்பாக வெடிக்க செய்த போலீசார் அவற்றை அழித்தனர். இதனால், பெரும் விபத்தை தடுத்தனர். விருகம்பாக்கம், தாரசாந்த்கர் பிரதான சாலையில் உள்ள புங்கை மரத்தின் அடியில், வெடிகுண்டு போல் சந்தேகப்படும், பொருள் இருப்பதாக, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற விருகம்பாக்கம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன், புங்கை மரத்தின் அடியில் இருந்த நாட்டு வெடிகுண்டு மீட்கப்பட்டது. பின், வடபழநி, குமரன் காலினியில் உள்ள காலி இடத்தில், இரண்டு வெடிகுண்டுகளும் புதைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.இந்நிலையில், நாட்டு வெடிகுண்டை செயலிழக்க செய்ய, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை, குமரன் காலனியில் உள்ள காலி இடத்தில், 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதில், 2 நாட்டு வெடி குண்டுகளும் வைக்கப்பட்டன.பின், வெடிகுண்டு நிபுணர்கள், நாட்டு வெடிகுண்டுகளை, மிக பாதுகாப்பாக வெடிக்க செய்து, அவற்றை அழித்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இது, சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் வெடி குண்டு போல் இருந்ததால், இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X