ஒப்பந்த ஊழியர்கள் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் | சென்னை செய்திகள் | Dinamalar
ஒப்பந்த ஊழியர்கள் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
00:34

தாம்பரம்--தாம்பரம் கோட்டத்தில் பணிபுரியும், மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தாம்பரம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட, சேலையூர் துணை மின் நிலையத்தில், ஒப்பந்த ஊழியராக கணேஷ், 34 என்பவர் பணிபுரிந்தார். கடந்த மாதம், 27ம் தேதி, சேலையூர் அருகே, மின் பராமரிப்பு பணியில் இருந்த போது, மின் கம்பத்தில் இருந்து விழுந்தார்.ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, இம்மாதம், 3ம் தேதி இறந்தார்.இறந்த கணேஷின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க, தாம்பரம் மின் கோட்ட செயற்பொறியாளரிடம், ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர் மறுத்ததால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகளிடம் மனு அளித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த தாம்பரம் மின்வாரிய அதிகாரிகள், கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு, பணி வழங்க மறுத்துள்ளனர்.இதை கண்டித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் ஜெய்சங்கர் தலைமையில், தாம்பரம் மின் கோட்ட அலுவலகம் முன், ஒப்பந்த ஊழியர்கள், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி வழங்காமல் செய்யும் மோசடிகளை கண்டித்து, கோஷம் எழுப்பினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X