சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு மூடல்?: 'கிலி'யில் 'கமிஷன்' அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜூன்
2021
02:23
பதிவு செய்த நாள்
ஜூன் 24,2021 00:36

சென்னை--தொடர் புகார்களை அடுத்து, சி.எம்.டி.ஏ., கட்டுமானப் பிரிவு மிக விரைவில் மூடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



இதன் பணிகளை, பொதுப்பணித்துறை ஏற்க உள்ளதாக வெளியாகும் தகவல்களால், 'கமிஷன் அதிகாரிகள்' அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், இரண்டு கண்காணிப்பு பொறியாளர்கள், மூன்று செயற்பொறியாளர்கள் தலைமையில் ஒரு கட்டுமான பிரிவு செயல்படுகிறது.சி.எம்.டி.ஏ., சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களில், இப்பிரிவு அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.



கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், சாத்தாங்காடு இரும்பு அங்காடி வளாகம் போன்ற திட்டங்களை இப்பிரிவு நிர்வகித்து வருகிறது.இத்திட்டங்களில் கட்டுமான பிரிவு அதிகாரிகள், கமிஷன் பெருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களின் கமிஷன் தேவை, அதை பூர்த்தி செய்யும், ஒப்பந்ததாரரின் தேவை அடிப்படையிலேயே, இவர்கள் புதிய திட்டங்களை பரிந்துரைப்பதாகவும், பகிரங்கமாகவே பலர் புகார் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:நகரமைப்பு திட்டமிடல் தொடர்பான பணிகள் தான் சி.எம்.டி.ஏ.,வின் பிரதான பொறுப்பு. ஆனால், இங்கு கட்டுமான பிரிவு பொறியாளர்கள் ஆதிக்கத்தால், பணிகளின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.இவர்களின் கமிஷன் வசூலால், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சி.எம்.டி.ஏ.,வுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.சி.எம்.டி.ஏ., போன்ற நிறுவனங்களில் உள்ள கட்டுமான பணிகளை, பொதுப்பணித்துறை தனி பிரிவு ஏற்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.இதற்கான பூர்வாங்க பணிகள் பொதுப்பணித்துறையில் நடந்து வருகிறது. இதற்கு சி.எம்.டி.ஏ. உரிய ஒப்புதலை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
25-ஜூன்-202111:11:28 IST Report Abuse
jay லஞ்ச பெருச்சாளிகளை ஒழிக்க வேணும்
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
24-ஜூன்-202119:43:20 IST Report Abuse
Sathiamoorthy.V சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் மேற்குறிப்பிட்ட குற்றசாட்டுகள் போக பாமர மக்களை வாட்டி வதைக்கிறது . ஒரு மனைப்பிரிவில் சிலருக்கு சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் அங்கீகாரம் வழங்கும் வேண்டாதவர்களை புறக்கணிக்கும் . உதாரணத்திற்கு குன்றத்தூர் அன்னை தெரசா நகரில் வெகு சிலரே சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் மூலம் அங்கீகாரம் பெற்றனர் . சிலர் DTCP அங்கீகாரம் பெற்றனர் . இவர்கள் முதலில் எங்கள் மனை பிரிவிற்கு தொடர்பு சாலை இல்லை என அங்கீகாரம் செய்ய மறுத்தனர் . இப்போது எங்கிருந்து தொடர்பு சாலை வந்தது? பொதுப்பணி துறை சாலை வேறு பஞ்சாயத்து சாலை வேறு என்றனர் . மக்களின் சாலைதானே . மக்களின் விரோத போக்கு நிறைந்த சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் முழுதும் மாற்ற பட வேண்டும் . விற்றவன் அரசியல்வாதி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X