சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு மூடல்?: 'கிலி'யில் 'கமிஷன்' அதிகாரிகள் | சென்னை செய்திகள் | Dinamalar
சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு மூடல்?: 'கிலி'யில் 'கமிஷன்' அதிகாரிகள்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

24 ஜூன்
2021
02:23
பதிவு செய்த நாள்
ஜூன் 24,2021 00:36

சென்னை--தொடர் புகார்களை அடுத்து, சி.எம்.டி.ஏ., கட்டுமானப் பிரிவு மிக விரைவில் மூடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



இதன் பணிகளை, பொதுப்பணித்துறை ஏற்க உள்ளதாக வெளியாகும் தகவல்களால், 'கமிஷன் அதிகாரிகள்' அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், இரண்டு கண்காணிப்பு பொறியாளர்கள், மூன்று செயற்பொறியாளர்கள் தலைமையில் ஒரு கட்டுமான பிரிவு செயல்படுகிறது.சி.எம்.டி.ஏ., சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களில், இப்பிரிவு அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.



கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், சாத்தாங்காடு இரும்பு அங்காடி வளாகம் போன்ற திட்டங்களை இப்பிரிவு நிர்வகித்து வருகிறது.இத்திட்டங்களில் கட்டுமான பிரிவு அதிகாரிகள், கமிஷன் பெருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களின் கமிஷன் தேவை, அதை பூர்த்தி செய்யும், ஒப்பந்ததாரரின் தேவை அடிப்படையிலேயே, இவர்கள் புதிய திட்டங்களை பரிந்துரைப்பதாகவும், பகிரங்கமாகவே பலர் புகார் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:நகரமைப்பு திட்டமிடல் தொடர்பான பணிகள் தான் சி.எம்.டி.ஏ.,வின் பிரதான பொறுப்பு. ஆனால், இங்கு கட்டுமான பிரிவு பொறியாளர்கள் ஆதிக்கத்தால், பணிகளின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.இவர்களின் கமிஷன் வசூலால், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சி.எம்.டி.ஏ.,வுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.சி.எம்.டி.ஏ., போன்ற நிறுவனங்களில் உள்ள கட்டுமான பணிகளை, பொதுப்பணித்துறை தனி பிரிவு ஏற்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.இதற்கான பூர்வாங்க பணிகள் பொதுப்பணித்துறையில் நடந்து வருகிறது. இதற்கு சி.எம்.டி.ஏ. உரிய ஒப்புதலை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X