வாழப்பாடி:மளிகை வியாபாரியை அடித்துக் கொன்றதாக, ஏத்தாப்பூர் எஸ்.எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
01:56

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் அருகே, இடையப்பட்டி, வில்வனுார் மேற்கு காட்டைச் சேர்ந்தவர் முருகேசன், 40; வாழப்பாடியில் மளிகை, பூக்கடை நடத்தி வந்தார். சேலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் முருகேசன், தன் நண்பர்களான, ஜெய்சங்கர், 38; சிவன்பாபு, 39 ஆகியோருடன், பைக்கில் நேற்று முன்தினம் மதியம், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார்.



மூவரும் ஒரே பைக்கில், வில்வனுார் திரும்பி வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஏத்தாப்பூர் எஸ்.எஸ்.ஐ., பெரியசாமி, ஏட்டு முருகன், பட்டாலியன் போலீஸ்காரர் திவாகர், பாலாஜி ஆகியோர் பைக்கை மறித்தனர்.



போதை தலைக்கேறிய நிலையில், மூவரும் தள்ளாடியபடி வந்ததால், பைக்கை நிறுத்தி விட்டுச் செல்ல அறிவுறுத்தினர். அப்போது, முருகேசன் ஆபாச வார்த்தையால் திட்டினார். இதை கண்டித்த எஸ்.எஸ்.ஐ., பெரியசாமி, அவரை லத்தியால் தாக்கினார்.



முற்றுகை





அப்போது சாலையில் விழுந்த முருகேசன், தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு உயிரிழந்தார்.இதையறிந்த அவரது உறவினர்கள், 'போலீசார் தாக்கியதால் தான் முருகேசன் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்' எனக் கூறி, ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.



அதோடு, சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலையும் வாங்க மறுத்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவ, ஏத்தாப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. உறவினர்களிடம் போலீசார், வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர். முருகேசனின் சகோதரர் துரைசாமி, 42 புகார்படி, எஸ்.எஸ்.ஐ., பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிந்து, ஏத்தாப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.



இதையடுத்து, சேலம் டி.ஐ.ஜி., மகேஸ்வரி, எஸ்.எஸ்.ஐ., பெரியசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.அவருடன் பணியில் இருந்த ஏட்டு முருகன், பட்டாலியன் போலீஸ்காரர் திவாகர், பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.



உடல் தகனம்





முருகேசனின் உறவினர்களிடம், டி.ஐ.ஜி., மகேஸ்வரி, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பேச்சு நடத்தினர். அரசிடம் இழப்பீடுக்கு பரிந்துரை செய்து பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதையேற்று, உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வில்வனுாரில் உடல் தகனம் செய்யப்பட்டது.வியாபாரி முருகேசனை, எஸ்.எஸ்.ஐ., தாக்கிய நிலையில், அதை அவருடன் பணிபுரிந்த ஏட்டு முருகன், போலீசார் திவாகர், பாலாஜி ஆகியோரும், முருகேசனுடன் வந்தவர்களும் வீடியோ எடுத்தனர்.



முருகேசன் இறந்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியானது. அதை வெளியிட்டது போலீசாரா, முருகேசனுடன் வந்தவர்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ரூ.10 லட்சம்இந்நிலையில், பலியான முருகேசன் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.



ரூ.1 கோடி இழப்பீடுராமதாஸ் கோரிக்கை





பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:தன்னை தாக்க வேண்டாம் என முருகேசன் கதறும் போதிலும், அதைப் பொருட்படுத்தாமல், சிறப்பு எஸ்.ஐ., பெரியசாமி நடு சாலையில் வைத்து தாக்குவது மிருகத்தனமானது. அதை மன்னிக்க முடியாது.



சாத்தான்குளம் போலீஸ் படுகொலை நிகழ்ந்த ஓராண்டுக்குப் பின், அதே நாளில் முருகேசன் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான சிறப்பு எஸ்.ஐ., பெரியசாமி உள்ளிட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேசன் குடும்பத்திற்கு,

1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X