பெண் பலி: தடுப்பூசி காரணமா? | சேலம் செய்திகள் | Dinamalar
பெண் பலி: தடுப்பூசி காரணமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
01:59

தலைவாசல்:சேலம் மாவட்டம், தலைவாசல், காட்டுக் கோட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி, 24; டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி, 20. இவருக்கு கடந்த பிப்ரவரியில், சேலம் அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.



கடந்த 19ல் வீட்டில் இருந்த சுப்புலட்சுமிக்கு, காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சித்ரா, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியுள்ளார்.அன்றிரவு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமி, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு சென்றார். உடல்நிலை சீராக உள்ளதாக கூறி, மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பினர்.நேற்று மதியம், வீட்டில் சுப்புலட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தடுப்பூசி போட்டதால் தான் அவர் இறந்ததாக போலீசில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X