27ல்! புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு... 50 நாட்களுக்குப் பின் பட்டியல் சமர்ப்பிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
05:35

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் மட்டும் பதவியேற்றுள்ள நிலையில், வரும் 27ம் தேதி அமைச்சரவை பதவியேற்க உள்ளது.



சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2ல் வெளியான நிலையில், 50 நாட்களுக்கு பின் அமைச்சரவை பட்டியலை முதல்வர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசையிடம் நேற்று வழங்கினார் .புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்., - 10 ; பா.ஜ., - 6 தொகுதிகளில் வென்று, ஆட்சியை கைப்பற்றினர்.என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, மே 7ல் முதல்வராக பதவியேற்றார். முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று, மே 22 வரை வீட்டு தனிமையில் இருந்தார்.



நீண்ட இழுபறிதுணை முதல்வர், சபாநாயகர் மற்றும் ஒரு அமைச்சர் பதவியை பா.ஜ., கேட்டது. துணை முதல்வர் பதவி தர இயலாது என முதல்வர் ரங்கசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ.,விற்கு சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர் பதவி; என்.ஆர்.காங்., கட்சிக்கு துணை சபாநாயகர் மற்றும் மூன்று அமைச்சர் பதவி என முடிவு செய்யப்பட்டது.திடீர் மாற்றம்மணவெளி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., செல்வம், கடந்த 16ல் சபாநாயகராக பதவியேற்றார். பா.ஜ.,வில் மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., நமச்சிவாயம், காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார் ஆகியோர், அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டனர்.



பின், திடீரென ஜான்குமார் பெயரை நீக்கி, ஊசுடு - தனி தொகுதி எம்.எல்.ஏ., சாய்சரவணன் குமார் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஜான்குமார் டில்லியில் முகாமிட்டு, அமைச்சர் பதவியை பெற பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டார்.பட்டியல் தயார்இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று காலை அவசரமாக புதுச்சேரி திரும்பினார். முதல்வர் ரங்கசாமி, காலை 9:35 மணியளவில் சட்டசபையில் உள்ள தன் அலுவலகம் வந்தார்.அங்கிருந்து அமைச்சர்கள் பெயர் பட்டியலுடன், கவர்னர் மாளிகைக்கு சென்றார். காலை 9:38 மணிக்கு கவர்னர் தமிழிசையை சந்தித்து, அமைச்சரவை பட்டியலை வழங்கினார். இருவரும் சில நிமிடங்கள், அரசியல் நிலவரம் குறித்து பேசினர்.மீண்டும் சட்டசபைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ''அமைச்சர்கள் பெயர் பட்டியலை கவர்னரிடம் வழங்கி உள்ளேன்.



மத்திய உள்துறை ஒப்புதல் அளித்ததும், அமைச்சர்கள் பெயர் அறிவிக்கப்படும். பின் பதவியேற்பு நடைபெறும்,'' என்றார்.தனி ஆலோசனைபிற்பகல், 2:30 மணிக்கு மீண்டும் சட்டசபைக்கு வந்த முதல்வர் ரங்கசாமியை, சபாநாயகர் செல்வம், பா.ஜ., தரப்பில் அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோர் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். பின், முதல்வரும், நமச்சிவாயமும் 30 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.சபாநாயகர் செல்வம் கூறுகையில், ''முதல்வரை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு குறித்து ஆலோசனை நடத்தினோம்.



வரும் 27ம் தேதி மதியம், 2:00 மணி முதல் மாலை 4:00 மணிக்குள் அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும்,'' என்றார்.50 நாட்கள்நேற்று மாலை கவர்னர் தமிழிசை கூறுகையில், ''முதல்வர் ரங்கசாமி அளித்த அமைச்சரவை பட்டியல், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.''உள்துறை அனுமதி பெற்ற பின், வரும் 27ம் தேதி மதியம் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும். அமைச்சர்கள் யார் என்பது ஆண்டவனுக்கும், ஆள்பவருக்கும் மட்டுமே தெரியும்,'' என்றார்.மே 2ல் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 50 நாட்களுக்கு பின் அமைச்சரவை பட்டியல் கவர்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.உலா வரும் பட்டியல்அமைச்சரவை பட்டியலுக்கு, மத்திய உள்துறையின் அனுமதி பெற வேண்டி உள்ளது. அதனால், பட்டியலில் உள்ளவர்கள் பெயரை கூறாமல், முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்தார். ஆனால், சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான அமைச்சரவை பட்டியல் உலா வருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X