கத்தியால் குத்தி கேரள நபர் கடத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
22:41

பெ.நா.பாளையம்:கேரள நபரை கத்தியால் குத்தி, காரில் கடத்தி சென்ற, 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஷாஜி, 43. இவர், அங்குள்ள பலரிடம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இவர் மீது அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக கடன்காரர்களுக்கு பயந்து, பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் வீதியில், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இவர், மலப்புரத்தை சேர்ந்த முகமது சபீரிடம், 54 லட்ச ரூபாய் கடன் பெற்று இருந்தார். முகமது ஷாஜி, பெரியநாயக்கன்பாளையம் அருகே இருப்பதை அறிந்த முகமது சபீர், தனது நண்பர்கள் ஆரிப், ரஜீஷ், ஜாவித், ஆனந்த், ஹாரிஸ்பாபு, ஜினு, டான்தாமஸ் ஆகியோருடன் இரண்டு கார்களில் நேற்று முன்தினம் இரவு மத்தம்பாளையம் வந்தனர். முகமது ஷாஜியை கண்டுபிடித்து, பணம் தருமாறு கேட்டனர்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கும்பல், முகமது ஷாஜியை கத்தியால் குத்தியது. பின், அவரை காரில் ஏற்றிக் கொண்டு, மேட்டுப்பாளையம் ரோடு, பெட்டதாபுரம் அருகே சென்ற போது, ஷாஜி சத்தமிட்டதால், அவரை கீழே இறக்கி விட்டு, விட்டு கும்பல் சென்று விட்டது. அந்த வழியாக வந்த போலீசார் ஒருவர், முகமது ஷாஜியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார், முகமது சபீர் உள்ளிட்ட, 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X