உளவியல் பிரச்னைகளுக்கு ஆலோசனை மையம் 'ரெடி' :உளவியல் பிரச்னைகளுக்கு ஆலோசனை கலெக்டர் அலுவலகத்தில் மையம் 'ரெடி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
22:46

கோவை:கொரோனா தொற்றால் ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக உளநல மையம் திறக்கப்பட்டுள்ளது.மையத்தை திறந்துவைத்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:மாவட்ட அளவில் கடந்த மே, 1ம் தேதி துவக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இதுவரை காலிப்படுக்கை தொடர்பாக, 5,095 அழைப்புகளும், ஆம்புலன்ஸ் சேவை தொடர்பாக, 664, பரிசோதனை சார்ந்த தகவல் பெற, 6,046, தடுப்பூசி தகவல் பெற, 4,988, இ-பதிவு குறித்து, 492, பிற தகவல்கள் குறித்து, 3,389 என, 20 ஆயிரத்து 674 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா காரணமாக பல்வேறு உளவியல் பிரச்னைகளுக்கு ஆளானவர்களுக்கு ஆலோசனை வழங்க சமூக உளநல மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு உளவியல் மருத்துவர்கள், சமூகப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள், உளவியலாளர்கள் என, 12 பேர் பணியினை மேற்கொள்ளவுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தடுப்பூசி தொடர்பான பயம், தனிமைப்படுத்தப்படுவதால் ஏற்படும் மனச்சோர்வு, சிகிச்சைக்கு பின் ஏற்படும் உளவியல் பிரச்னை என அனைத்துக்கும் ஆலோசனை வழங்கப்படும். பொதுமக்கள், அனைத்து நாட்களிலும் காலை, 9:00 முதல் இரவு, 7:30 மணி வரை, 0422 2200029, 0422 2201824, 0422 2201825, 0422 2201828 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X