தடைக்காலம் முடிந்தும் மீன்பிடிக்க தயங்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
23:33

ராமநாதபுரம் : படகு பழுதுநீக்க பணி, தாமதம், இறாலுக்கு விலை இல்லாதது ஆகிய காரணங்களால் தடைக்காலம் முடிந்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.



தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இக்காலத்தில் மீனவர்கள் விசைப்படகை பழுது பார்ப்பது வழக்கம்.ஆனால் கொரோனா ஊரடங்கால் அனைத்து பட்டறைகள், பழுது பார்ப்பு நிலையங்கள் மூடப்பட்டன. படகு பழுது பார்ப்பு பணிகள் நடக்கவில்லை. இதனால் ஜூன் 15ல் தடைக்காலம் முடிந்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.



இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''படகுகள் பழுது பார்ப்பு பணிகளை தற்போது மீனவர்கள் முடித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் மீன்பிடிக்க செல்வார்கள். தடைக்காலம் முடிந்த பின் வரும் சீசனில் வழக்கமாக ராமேஸ்வரம் மீனவர்கள் இறால் பிடிப்பில் அதிக ஆர்வம் காட்டுவர். அதிகளவில் இறால் கிடைக்கும். ஆனால் தற்போது ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படாததால் இறாலுக்கு நல்ல விலை இல்லை. அத்துடன் பணியாளர்களும் வேலைக்கு கிடைப்பது இல்லை. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்'' என்றார்.---

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X