மரங்கள் பாதுகாப்பு கமிட்டிக்கு... தேவை உயிர்ப்பிப்பு! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஜூன்
2021
03:38
பதிவு செய்த நாள்
ஜூன் 25,2021 03:34

கோவை:நகர வளர்ச்சி என்கிற பெயரிலும், இடையூறாக இருப்பதாக கூறியும் மரங்களை வெட்டி வீழ்த்துவதை தடுக்க, கலெக்டர் தலைமையிலான 'மரங்கள் பாதுகாப்பு கமிட்டி'க்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமென சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவையை சுற்றி மேற்குத்தொடர்ச்சி மலை, சங்கிலித்தொடர் போல் குளங்கள், நகரங்களை கடந்து பயணிக்கும் நொய்யல் ஆறு அமைந்திருப்பதால், இயற்கையை பேணிக்காப்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மரக்கன்று நடவும், நட்ட மரங்களை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துகின்றனர். நகர வளர்ச்சிக்காக ஏதேனும் ஒரு இடத்தில் மரங்களை வெட்டும் சூழல் ஏற்பட்டால், சூழல் ஆர்வலர்களுடன் பேசி, வேரோடு பெயர்த்தெடுத்து, மற்றொரு இடத்தில் மறுநடவு செய்கின்றனர்.


இயற்கை சார்ந்து மக்களிடம் விழிப்புணர்வு இருந்தாலும், ஏதேனும் காரணத்தை கூறி, அவ்வப்போது, சில இடங்களில், மரங்களை வெட்டி வீழ்த்துவதும் நடக்கிறது. அத்தகவல் அறிந்தால், சூழல் ஆர்வலர்கள் விரைந்து சென்று, பெருமுயற்சி எடுத்து, மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்துகின்றனர்.


அத்தகைய ஒரு சம்பவம், கோவையில் நேற்று நடந்தது.கே.கே.புதுார், பாலாஜி பார்க்ஸ் பகுதியில், 15 வயதான மரமல்லி மரத்தை, பூ மரம் என்று கூறியும், வீட்டுக்குள் பூச்சி வருகிறது; சுற்றுச்சுவரை சேதப்படுத்துவதாக கூறியும், மரத்தை வெட்டி வீழ்த்துவதற்கு, வடக்கு தாசில்தார் மகேஷ்குமாரிடம் ஒருவர் அனுமதி பெற்றுள்ளார். வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்து, அம்மரத்தின் மதிப்பு, 400 ரூபாய் என மதிப்பிட்டுள்ளார்.அம்மரத்தின் கிளைகள் நேற்று வெட்டப்பட்டன. அதையறிந்த சூழல் ஆர்வலர்கள், டி.ஆர்.ஓ., ராமதுரை முருகனுக்கு தகவல் தெரிவித்ததோடு, மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து நிறுத்தினர். இதனால், அம்மரம் காப்பாற்றப்பட்டது.


மரங்கள் வாழ்த்தும்!


இதுகுறித்து, சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:முறையாக ஆய்வு செய்யாமல், மரங்களை வெட்ட அனுமதி வழங்குவது வேதனையளிக்கிறது. 15 வயதுடைய, பெரிய உயரமான மரத்தின் மதிப்பு, 400 ரூபாய் என கூறியிருப்பதை ஆய்வு செய்ய வேண்டும்.கலெக்டரை தலைவராகக் கொண்டு, 'மரங்கள் பாதுகாப்பு கமிட்டி' அமைக்கப்பட்டது. செயல்பாட்டில் இல்லாத அக்கமிட்டிக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.


மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டுமென விவாதிக்க வேண்டும். நகர வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வெட்டிச் சாய்ப்பதை ஏற்கக் கூடாது. அக்குழுவினர் கள ஆய்வு செய்து, அவசியம் ஏற்பட்டாலும், அம்மரத்தை வேரோடு பெயர்த்து, மறுநடவு செய்ய வேண்டும்.கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிய போது, ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டதை யாரும் இன்னும் மறக்கவில்லை. இயற்கையாகவே ஆக்சிஜன் தரக்கூடிய மரங்களை வெட்டி வீழ்த்த, அனுமதி கொடுக்க, வருவாய்த்துறையினருக்கு எப்படி மனது வந்தது எனத்தெரியவில்லை. கலெக்டர் தலைமையிலான அக்கமிட்டியை உயிர்ப்பித்தால் மரங்கள் வாழ்த்தும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X