தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு? பிரதமர், நிதியமைச்சரை சந்திக்க 'அய்கா' அமைப்பு முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
03:39

கோவை:சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குதீர்வு காண பிரதமர், நிதியமைச்சரை சந்திக்க 'அய்கா' அமைப்பு முடிவு செய்துள்ளது.அகில இந்திய அளவிலான சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட புதிய அமைப்பு 'அய்கா' துவங்கப்பட்டுள்ளது.



170 தொழில் அமைப்புகள், 2 லட்சம் தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அகில இந்திய அமைப்பின் காணொலி காட்சி சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோவை இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக், துணைத்தலைவர் செந்தில்குமார், கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, இந்திய தொழில் வர்த்தகசபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியம், கொடிசியா முன்னாள் தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வில், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கச்சா பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டன.


இந்திய சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மூலப்பொருட்களான ஸ்டீல், இரும்பு, அலுமினியம், காப்பர், பிவிசி, கிராப்ட் பேப்பர், பாலிபுரப்பலின், பாலிகார்பனேட், ஏபிஎஸ் உள்ளிட்ட பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வுகள் குறித்து மத்திய அரசுகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.கடந்த ஏப்ரல், 2020ம் ஆண்டு முதல் ஜூன், 2021 வரையில் 'மைல்ட் ஸ்டீல்', 82.2 சதவீதமும், காப்பர் 109.86 சதவீதமும், அலுமினியம் அலாய், 94.34 சதவீதமும் உயர்ந்துள்ளன. பிற மூலப்பொருட்களும் குறைந்தபட்சம், 50 சதவீதம் முதல், 110 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன.பொது துறை நிறுவனங்கள், ஆர்டர்கள் ரத்து செய்வதை ஏற்றுக் கொள்வதோடு, அபரிதமான ஸ்டீல் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். செயில், விசாக் ஸ்டீல் போன்றவை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் ஸ்டீல் வழங்க வேண்டும்.வெளிநாடுகளுக்கு நேரடியாக இரும்பு தாதுவையும், இரும்பையும் ஏற்றுமதி செய்வதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். அவற்றை மதிப்பு அதிகரிக்கப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும்.


ஜி.எஸ்.டி.,யை அடிப்படையாகக் கொண்டு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நேரடியாக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசி தீர்வு காண முடிவெடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய அளவிலான பல சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X