உதட்டில் சிரிப்பைத் தந்தாய்; மனதில் கனத்தைத் தரலாமா? இனி, தொழிலாளரால் தாக்கு பிடிக்க முடியாது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்; மனதில் கனத்தைத் தரலாமா? இனி, தொழிலாளரால் தாக்கு பிடிக்க முடியாது
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

25 ஜூன்
2021
03:46
பதிவு செய்த நாள்
ஜூன் 25,2021 03:45

திருப்பூர்:வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர்களின் 'வேடந்தாங்கலாக' திகழ்கிறது, பின்னலாடை நகரான, திருப்பூர்; ஆடை உற்பத்தி சார்ந்து, எட்டு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.ஊரடங்கால், கடந்த மே மாதம் முதல், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால், தொழிலாளர்கள், வேலை இன்றி, வருவாய் இழப்புக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதால், கொரோனா பிடியில் இருந்து 'தப்பித்தால் சரி' என்ற மனநிலையுடன், குடும் பொருளாதார பிரச்னைகள் குறித்த மனக்குமுறல்களை அடக்கிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.ஐம்பது சதவீத தொழிலாளருடன் ஏற்றுமதி நிறுவனங்களும், ஏற்றுமதி சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மட்டும் இயங்குகின்றன. உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. குடும்ப பொருளாதாரம் குறித்த கவலை தொழிலாளர் மத்தியில் மேலோங்கியுள்ளது.


இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள், நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:இனியும் முடக்கினால்யதார்த்த நிலையாகாதுசி.ஐ.டி.யு., பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத்:கொரோனா பரவல் அதிகரித்ததால், ஊரடங்கு தவிர்க்கமுடியாததாகிவிட்டது. தற்போது, திருப்பூரில் தொற்று பரவல் குறைந்துள்ளது. இனியும் நிறுவனங்களின் இயக்கத்தை முடக்கி வைப்பது, யதார்த்த நிலையாகாது.


ஒரு மாதத்துக்கும் மேல் வேலை இல்லாததால், தொழிலாளர்கள், வருவாய் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை, கடன், அன்றாட செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். அரசு, ரேஷனில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது. தொழிலாளருக்கு வேறு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.அந்தந்த நிறுவனங்கள் மூலம், தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி, பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அனைத்து பின்னலாடை உற்பத்தி, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களையும் விரைவில் இயக்கத்துக்கு கொண்டுவந்து, தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.


நுாறு சதவீத தொழிலாளரை பணி அமர்த்த அரசு அனுமதித்தாலும் கூட, நடைமுறையில் உடனடியாக சாத்தியமாகாது. ஏராளமான தொழிலாளர் சொந்த ஊர் சென்றுள்ளனர். பஸ் இயக்கினால் மட்டுமே, அவர்கள் மீண்டும் திருப்பூர் திரும்புவர்.


தொழில் வளர்ச்சிக்குதடைக்கல்லாகி விடும்


எல்.பி.எப்., பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்:மருத்துவமனைகளில் படுக்கை இல்லை; ஆக்சிஜன்; வென்டிலேட்டர் தட்டுப்பாடு இவைகளெல்லாம், தொழிலாளரை பயமுறுத்திவிட்டன. தற்போது, தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும்; நாம் எப்போது வேலைக்குச் செல்லலாம் என்ற, மனநிலைக்கு தொழிலாளர் மாறியுள்ளனர்.ஆடை உற்பத்தி துறையை பொறுத்தவரை, பல தொழிலாளர் அருகருகே பணிபுரிவது தவிர்க்கமுடியாததாகிறது.


அலட்சியம் காட்டினால், தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர் பாதுகாப்புக்கு முதல் முன்னுரிமை அளிக்கவேண்டும்.தங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த உதவவேண்டும்; தொற்று தடுப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும். பாதுகாப்பை உறுதி செய்து, தொழிலாளர் பயமின்றி பணிபுரியும் வகையிலான சூழலை உருவாக்கவேண்டும்.


தொழில் துறை தொடர்ந்து முடக்கப்பட்டால், தொழிலாளர் நிரந்தரமாக சொந்த ஊர் நோக்கி சென்றுவிடுவர். இது தொழில் வளர்ச்சிக்கு தடைக்கல்லாகிவிடும்இனி, தொழிலாளரால்தாக்கு பிடிக்க முடியாதுபி.எம்.எஸ்., மாநில துணை தலைவர் சந்தானகிருஷ்ணன்:பின்னலாடை தொழிலாளர்கள், வாரச்சம்பளம் பெறுவோர். ஏழு வாரங்களாக வேலை இல்லாததால், தொழிலாளர்களுக்கு, பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


இதற்கு மேலும் நிறுவனங்களை பூட்டிவைத்தால், தொழிலாளரால் தாக்குப்பிடிக்கவே முடியாது. வாழ்வாதாரத்தை, இனியும், இ ழந்துவிடக்கூடாது.தொழிலாளருக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி செலுத்தவேண்டும். இதற்கு நிறுவனங்களுக்குதொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவர்.ஆடை உற்பத்தி நிறுவனங்களை தாமதிக்காமல், மீண்டும் இயக்கத்துக்கு கொண்டுவரவேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளருடன் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


போதிய தொழிலாளர் இல்லாததால், சாய ஆலை போன்ற பெரும்பாலான ஜாப்ஒர்க் நிறுவனங்களால் உற்பத்தியை சிறப்பாக தொடரமுடியவில்லை. ஆர்டர்கள் கைநழுவி, போட்டியாளர்களை நோக்கி நகர்தல்; கடன் சுமை, நிதி நெருக்கடி, நடைமுறை மூலதனத்தை பெறுவதில் சிக்கல் என தொழில்முனைவோரும் தவிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X