'பில்கேட்ஸ்' அறக்கட்டளையிலிருந்து வாரன் பபெட் திடீர் விலகல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஜூன்
2021
06:12
பதிவு செய்த நாள்
ஜூன் 25,2021 06:10

புதுடில்லி: 'பங்குச் சந்தை பிதாமகர்' என போற்றப்படும், வாரன் பபெட், 'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின்' அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது, உலகமெங்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.



'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ், வாரன் பபெட்டின் துாண்டுதலின் காரணமாகவே, அறக்கட்டளை வாயிலாக மிகப் பெரும் அளவில் நன்கொடைகளை வழங்கி வருகிறார்.இந்த அறக்கட்டளையில், பில்கேட்ஸின் மனைவி மெலிண்டாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், திடீரென வாரன் பபெட் அறக்கட்டளை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



அண்மையில், பில்கேட்சும் அவரது மனைவி மெலிண்டாவும் பரஸ்பரம் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.இருவரும் இல்லற வாழ்க்கையில் பிரிந்தாலும், தொண்டு பணிகள் தொடரும் என்று தெரிவித்திருந்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, விவாகரத்து முடிவுக்கு வந்திருப்பது தான், பபெட் விலகலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.'கேட்ஸ்' அறக்கட்டளையின் நிர்வாக குழுவின் உறுப்பினர்களாக, இம்மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.


இந்நிலையில், அறக்கட்டளை பணிகளில் பில்கேட்சுக்கும், மெலிண்டாவுக்கும் இடையே, நடுவில் இருந்து செயல்படுவது சிரமம் எனக் கருதிய காரணத்தினாலேயே, பபெட் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக, பபெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த அறக்கட்டளையின் லட்சியமே என்னுடைய லட்சியமும் ஆகும்.'நான், என்னுடைய பங்காக, எனது, 'பெர்க்ஷைர் ஹாத்வே' பங்குகளில், 50 சதவீத பங்குகளை, அறக்கட்டளைக்கு வழங்கி விட்டேன். ஆகையால், அறக்கட்டளை பணிகளிலிருந்து விலகுகிறேன்' என தெரிவித்துள்ளார்.



தற்போது, 90 வயதாகும் வாரன் பபெட், அவரது சொந்த பணத்திலிருந்து, கிட்டத்தட்ட, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, கடந்த 15 ஆண்டுகளில் அறக்கட்டளை பணிகளுக்காக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-ஜூன்-202111:16:12 IST Report Abuse
அசோக்ராஜ் இப்போ ரெண்டே பேர்தான். அறக்கட்டளை பெயரை "மக்கள் நீதி மையம்"னு மாத்திடலாம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
25-ஜூன்-202109:04:20 IST Report Abuse
Sampath Kumar itha billu thaan கொரானாவிற்கு நம்மளை எல்லாம் பில் கட்ட வாய்த்த ஆசாமி இவனின் பேராசையில் உலகம் கடும் நஷடத்தை சந்தித்து உள்ளதை நாம் சிந்திக்கவேடும்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
25-ஜூன்-202108:17:32 IST Report Abuse
 N.Purushothaman நல்லது ..ஓய்வெடுங்கள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X