தவணை தொகை விலக்கு 'டாக்சி' ஓட்டுனர்கள் கோரிக்கை | சென்னை செய்திகள் | Dinamalar
தவணை தொகை விலக்கு 'டாக்சி' ஓட்டுனர்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
06:16

பிராட்வே--ஊரடங்கு காலத்தில், வாகன கடன் தவணை தொகையை வசூலிக்க விலக்கு அளிக்க கோரி, 'கால் டாக்சி' ஓட்டுனர்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையில், 30 ஆயிரம் கால் டாக்சிகள் இயங்கி வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய இ.எம்.ஐ., தொகையில், ஆறு மாதம் விலக்கு அளிக்கப்பட்டது.கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் 2021 மே 10ம் தேதி முதல், தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.வருவாய் இல்லாத நிலையில், இ.எம்.ஐ., கட்ட நிதிநிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. பணம் செலுத்தாதோரின் வாகனங்களை பறிமுதல் செய்யவும், நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.இதனால், தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே 2020ல் தவணை செலுத்துவதற்கு, ஆறு மாத காலத்திற்கு விலக்கு அளித்தது போல, தற்போதும் விலக்கு அளிக்க வேண்டும் என, கால் டாக்சி ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X