அரசு நிலத்தை ஆக்கிரமித்து மோசடி? கலெக்டர் ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஜூன்
2021
06:40
பதிவு செய்த நாள்
ஜூன் 25,2021 06:18

சென்னை--சென்னை, செம்பியத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு புகார் குறித்து, கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.



பெரம்பூர் தாலுகா, செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:செம்பியத்தில், அரசு புறம்போக்கு நிலம், 150 ஏக்கர் வரை இருந்தது. இதில், நீர் நிலை அடங்கிய 49 ஆயிரம் சதுர அடி நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து, 30 மனைகளாக பிரித்து விற்றனர். இந்த மனைகளையும் சிண்டிகேட் வங்கியில் அடமானம் வைத்து, 9 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.கடனை திருப்பிச் செலுத்தாததால், நிலத்தை வங்கி விற்றுள்ளது. அதை வாங்கியவர், வேறு நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். இந்த மோசடி குறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை.என் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.



நிலத்தை சர்வே செய்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த புகாரை ஆராய்வதாக தெரிவித்தார்.இதையடுத்து, கலெக்டர் மற்றும் அதிகாரிகள், இடத்தை பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜூலை 14க்கு தள்ளி வைத்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202100:41:23 IST Report Abuse
oce இது தமிழக மெங்கும் நடந்து வரும் நில மோசடிகள் வாங்கி பயன்படுத்தாது விட்ட காலி பிளாட்டுகள் பொறம் போக்கிடங்கள் ஏரிகள் என ஏராளமானவை உள்ளன. ஒருத்தர் கேஸ் போட்டால் அதை வைத்து மற்ற நில அபகரிப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X