அரசு நிலத்தை ஆக்கிரமித்து மோசடி? கலெக்டர் ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு | செய்திகள் | Dinamalar
அரசு நிலத்தை ஆக்கிரமித்து மோசடி? கலெக்டர் ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

25 ஜூன்
2021
06:40
பதிவு செய்த நாள்
ஜூன் 25,2021 06:18

சென்னை--சென்னை, செம்பியத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு புகார் குறித்து, கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.பெரம்பூர் தாலுகா, செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:செம்பியத்தில், அரசு புறம்போக்கு நிலம், 150 ஏக்கர் வரை இருந்தது. இதில், நீர் நிலை அடங்கிய 49 ஆயிரம் சதுர அடி நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து, 30 மனைகளாக பிரித்து விற்றனர். இந்த மனைகளையும் சிண்டிகேட் வங்கியில் அடமானம் வைத்து, 9 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.கடனை திருப்பிச் செலுத்தாததால், நிலத்தை வங்கி விற்றுள்ளது. அதை வாங்கியவர், வேறு நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். இந்த மோசடி குறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை.என் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.நிலத்தை சர்வே செய்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த புகாரை ஆராய்வதாக தெரிவித்தார்.இதையடுத்து, கலெக்டர் மற்றும் அதிகாரிகள், இடத்தை பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜூலை 14க்கு தள்ளி வைத்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X